குளிரால் உதடுல வெடிப்பு இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க
குளிர்காலத்தில் சரும மட்டுமின்றி உதடுகளும் பாதிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று உதடுகளில் வெடிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் சில சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படும். இந்த பருவத்தில் எந்த லிப் பாம் பயன்படுத்தினாலும் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வறண்டு போக ஆரம்பிக்கும். எனவே, இந்த பதிவில் குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வறட்சி மற்றும் வெடிப்பு குணப்படுத்த சிறந்து வீட்டு வைத்தியங்கள் இங்கே.
26
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயை வெடித்திருக்கும் உதட்டின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால் உதடு வறட்சி மற்றும் வெடிப்பு நீங்கிவிடும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
36
கற்றாழை ஜெல் :
வெடித்திருக்கும் உங்கள் உதட்டின் மீது சிறிதளவு கற்றாழை ஜெல்லை தடவவும். அல்லது இதனுடன் தேங்காய் எண்ணெயின் சேர்த்து தடவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், உதடு வறட்சி மற்றும் வெடிப்பு நீங்கிவிடும்.
46
தேன்:
வெடித்து மற்றும் வறண்டு இருக்கும் உதட்டிற்கு தேன் ரொம்பவே நல்லது. இதற்குத் தேனை உங்களது உதட்டின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதட்டின் வறட்சி மற்றும் வெடிப்பு நீங்கி, உதடு மென்மையாக மாறும்.
வெண்ணையில் ஏராளமான ஆக்சிஜன் நெற்றிகள் உள்ளன. எனவே வெடித்திருக்கும் உங்களது உதட்டின் மீது இதை தொடர்ந்து தடவி வந்தால், விரைவில் குணமாகும். மேலும் வறட்சி நீங்கி உதடு மென்மையாகும்.