Castor Oil For Hair Growth : உங்கள் தலை முடி ரொம்பவே ஒல்லியாக இருக்கிறது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அடர்த்தியாக வளர ஆமணக்கு எண்ணெய் சிறந்த தேர்வாகும்.
முடி எலிவால் மாதிரி இருக்கா? ஆமணக்கு எண்ணெய் 'இப்படி' தேய்ங்க
தற்போது பரபரப்பான வாழ்க்கையால் உங்களால் உங்களது தலைமுடி பராமரிப்பதற்கு சரியான நேரம் ஒதுக்க முடியாமல் போகிறதா? இதனால் உங்களது தலைமுடி ரொம்பவே கொட்டி, பார்ப்பதற்கு எலிவால் மாதிரி இருக்கிறதா? இதுகுறித்து நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்றால் இன்றிலிருந்து அதை கவனித்துக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஆம், சரியான பராமரிப்பு இருந்தால் அழகான கூந்தலை நீங்கள் பெற முடியும். அதுமட்டுமின்றி முடி பராமரிப்புக்கு சிறந்த எண்ணெயும் அவசியம்.
26
தலைமுடிக்கு சிறந்த எண்ணெய் எது?
பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு பெரும்பாலானோர் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள். இது தலைமுடி பராமரிப்புக்கு ரொம்பவே நல்லது. ஆனால் இது போலவே ஆமணக்கு எண்ணெயும் தலைமுடி வளர்ச்சிக்கு திறம்பட செயல்படுகிறது தெரியுமா? ஆம், இந்த எண்ணெய் ஆரோக்கியமான கூந்தலைப் பெற, பல நூற்றாண்டுகளாகவே தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
36
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய் தலைமுடி நன்றாக வளரவும் வலுவாக இருக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஊக்குவிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே முடி உதிர்வதை தடுத்து, முடி ஒல்லியாவதை நிறுத்த ஆமணக்கு எண்ணெய் எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.
46
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:
ஆமணக்கு எண்ணெயை தலைமுறையில் தடவி நன்கு மசாஜ் செய்தால், மயிர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, தலை முடிக்கு அதிக ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற அனுமதிக்கிறது. இதனால் தலைமுடி வளர்ச்சி துண்டப்படுகிறது மற்றும் முடி ஒல்லியாவது தடுத்து, வலிமையாக்குகின்றது.
ஆமணக்கு எண்ணெயில் இருக்கும் ரிசினோலிக் அமிலம் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், இது வீக்கத்தை குறைக்கும் மற்றும் உச்சந்தலையில் தொற்றுக்களை தடுத்து, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது தவிர பொடுகு தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 உள்ளிட்ட அத்தியாவாசி கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளித்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் வறட்சியை தடுக்க உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெயை தலைமுடிக்கு தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஒரு நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் எழுந்தவுடன் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெய் தலைமுடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் வலிமையை அளிக்கும். மேலும் முடி உதிர்தல், முனைகள் பிளவு படுதல் குறைத்து முடியை அடர்த்தியாக்கும்.