வறண்ட சருமம்? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பட்டு போல மென்மையாகும்!

Published : Feb 04, 2025, 04:02 PM IST

Curd Face Pack : நீங்கள் வறண்ட சரும பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களது முகத்தை பட்டு போல மென்மையாக மாற்ற தயிருடன் சில பொருட்களை சேர்த்து முகத்தில் தடவுங்கள்.

PREV
14
வறண்ட சருமம்? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பட்டு போல மென்மையாகும்!
வறண்ட சருமம்? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பட்டு போல மென்மையாகும்!

தற்போது மாறி வரும் வானிலை காரணமாக நம்முடைய சருமமானது வறண்டு காணப்படும். வானிலை மாற்றத்தால் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறையும். இதன் காரணமாக முகம்தான் வறட்சியாக காணப்படும். மேலும் சருமத்தில் வெள்ளைப்புள்ளிகள் தெரிவது மட்டுமின்றி கரடு முரடாகவும் தூய தோன்றும். இதற்காக நாம் அதிக விலை கொடுத்து கடைகளில் விற்பனையாகும் பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் விளைவானது முகத்தில் சிறிது நேரம் இருக்கும். அதற்கு பதிலாக நீங்கள் தயிரை பயன்படுத்தலாம். 

24
தயிர் ஃபேஸ் பேக்

தயிர் வறண்ட சருமத்திற்கு ஒரு வரப் பிரசாதமாகும். இதில் இருக்கும் கொழுப்பு புரதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என பலவிதமான ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. எனவே வறண்ட சருமத்தை மென்மையாக மாற்ற தயிரை முகத்திற்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..

இதையும் படிங்க: முகம் ஜொலிக்க! வறண்ட சருமம் இருக்கவங்க செய்யக் கூடாத '4' தவறுகள்!

34
தயிர் ஃபேஸ் பேக்

இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் ஒற்றை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மறுநாள் காலை அதை பேஸ்ட் போல் தயாரித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் ரோஸ் வாட்டரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

பயன்படுத்தும் முறை:

முதலில் உங்களது முகத்தை நன்றாக சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் ஈரமில்லாதபடி துண்டை வைத்து துடைக்கவும். பிறகு தயாரித்து வைத்த முகத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். அதன் பிறகு முகத்தை உங்களது கைகளால் லேசாக மசாஜ் செய்யுங்கள் பின் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் ஆனது உங்களது முகத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது. முக்கியமாக முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

44
நினைவில் கொள்:

- இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் பேச்ட் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.

- தயிரில் ஆட்டிக்கு அமிலம் இருப்பதால் உனது தன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதை அதிகமாக பயன்படுத்த வேண்டும் குறைவாக மட்டுமே பயன்படுத்துங்கள்.

- இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  வறண்ட சருமமா? முக அழகை மெருகூட்டும் பெஸ்ட் 4 ஸ்க்ரப்.. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

Read more Photos on
click me!

Recommended Stories