குறையாத அழகுக்கு எத்தனை முறை 'முகம்' கழுவனும்? பலர் அறியாத தகவல்!!
உங்க சருமத்தை பராமரிக்க அதனை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். முக அழகு பராமரிப்பின் முதல் படியானது அதை சுத்தமாக வைத்திருப்பது தான். தினமும் சரியான நேரத்தில் முகத்தை கழுவுவதுதான் பருக்கள் இல்லாத பளபளப்பான சருமத்தை வைத்திருபதன் ரகசியம். நம்முடைய முகத்தில் எப்போதும் அழுக்கு, இறந்த செல்கள் இருக்கும். இதை நீக்க சரியான நேரத்தில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அழகாக வைத்திருக்க நினைக்கும் பலருக்கும் அதை எப்போதெல்லாம் கழுவ வேண்டும் என தெரியாது. இந்த பதிவில் ஒரு நாளுக்கு எத்தனை தடவை முகம் கழுவ வேண்டும் என இங்கு காணலாம்.
24
எத்தனை முறை முகம் கழுவலாம்?
காலை எழுந்ததும் முதலில் முகத்தை கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முகத்தை கழுவி விட்டு தான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இப்படி ஒரு நாளுக்கு கண்டிப்பாக இரண்டு தடவை முகம் கழுவ வேண்டும். நாள் முழுக்க முகத்தில் படிந்த அழுக்கு, தூசி ஆகியவற்றை நீக்க இரவில் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். நீங்கள் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துபவராக இருந்தால் அதை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீங்கள் பகலில் வெளியே சென்று வந்தால் முகத்தில் தூசு, அசுத்தங்கள் படிய வாய்ப்பாக அமையும். அதனை நீக்க வீட்டிற்கு வந்ததும் கண்டிப்பாக முகம் கழுவவேண்டும். நீங்கள் வீட்டிலேயே இருக்கும் போது அதிகமான எண்ணெய் பசை சருமத்தில் தோன்றினால் அப்போதும் முகத்தை கழுவலாம்.
முகத்தைக் கழுவும்போது அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கும் கிளென்சர் பயன்படுத்தலாம். உங்களுடைய சரும வகைக்கு ஏற்ற கிளென்சர் வாங்கு பயன்படுத்துங்கள். ஏனென்றால் சிலருக்கு வறண்ட சரும், சிலருக்கு எண்ணெய் வழியும் சருமம் என வெவ்வேறு சருமம் இருக்கலாம். அதனால் அதற்கு ஏற்ற கிளென்சர் வைத்து முகத்தை கழுவலாம். முகம் கழுவிய பிறகு டோனர், மாய்ஸ்சர் போடலாம். இதில் டோனர் இல்லாவிட்டாலும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதமாக இருக்கும்.
நீங்கள் வாங்கும் ஃபேஸ் வாஷ் உங்களுடைய சருமத்தை கடினப்படுத்துவதாக அமையக்கூடாது. மென்மையான ஃபேஸ்வாஷ்களை தேர்ந்தெடுத்து முகம் கழுவ வேண்டும். ஏனென்றால் கரடுமுரடான துகள்களை கொண்ட ஃபேஸ்வாஷ்கள் முகத்தில் உராய்வுகளை ஏற்படுத்தி சருமத்தை சேதப்படுத்தலாம். உலர்ந்த சருமத்தில் ஃபேஸ்வாஷை பயன்படுத்தக் கூடாது. முகத்தை முதலில் தண்ணீரால் கழுவிக்கொண்டு பின்னர் ஃபேஸ் வாஷை 20 முதல் 30 வினாடிகள் தடவி நன்கு மசாஜ் செய்து அதன் பின்னர் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவியப் பின்னர் துணியால் தேய்த்து துடைப்பதை தவிர்த்து விட்டு முகத்தின் மீது மென்மையாகத் தொட்டு உலரவிடலாம்.