Night Time Beauty Tips : நீங்கள் இரவு தூங்கும் முன் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்று உங்கள் முகத்தில் தடவி வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
இரவு முகத்தில் இந்த '1' பொருளை தடவி பாருங்க.. முகம் தகதகனு மாறிடும்!
அழகா இருக்க யாரு தான் விரும்ப மாட்டார்கள்? இளசுகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரும் இளமையாக தான் இருக்க விரும்புவார்கள். அதற்காக அவர்கள் பலவிதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். சிலர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி முகத்தில் தடவுகிறார்கள். ஆனால், அவற்றில் ரசாயனங்கள் கலந்திருப்பதால் உங்களது முகத்தில் அழகாய் கெடுத்து விடும் எனவே அவற்றைத் தவிர்த்து நம் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய சில பொருட்கள் உங்களது முகத்தை பளபளக்க செய்யும் தெரியுமா?
26
முகம் பளபளக்க
ஆம், நம்முடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை இரவு தூங்கும் நீங்கள் உங்களது முகத்தில் தடவி வந்தால் காலையில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும். என்னன்ன பொருட்கள் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றியும் இங்கு பார்க்கலாம்.
36
தேன் (எண்ணெய், முகப்பரு சருமம்):
தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகும். இது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்கும். இதை முகத்தில் பயன்படுத்தினால், கரையற்ற சருமத்தை பெறுவீர்கள். இதை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகம் சுத்தமாகும். இதற்கு தேனை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் காய வைத்து விட்டு பிறகு 10 நிமிடம் மசால் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
46
பால்:
கண்டிப்பாக இது எல்லாருடைய வீட்டிலும் இருக்கும். பால் சருமத்திற்கு ரொம்பவே நல்லது. பலருக்கும் சருமம் கருமையாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு பால் பெரிதும் உதவியாக இருக்கும். இதை உங்களது முகத்தில் தடவி வந்தால் முகம் நன்கு பளபளக்கும். இதற்கு நீங்கள் பச்சை பாலை தான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் பச்சை பாலை உங்களது முகத்தில் தடவி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
சரும பராமரிப்பில் வீட்டு வைத்தியத்தில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்படுகிறது. மேலும் இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு கடலை மாவுடன் சிறிதளவு மஞ்சள், பால் அல்லது தண்ணீர் சேர்த்து முகத்தில் பேஸ்ட் போல் தடவி, நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் சருமத்தில் ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதால், இது சீக்கிரம் வயதாவது தடுக்க உதவுகிறது. முக்கியமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் ரொம்பவே நல்லது. ஆலிவ் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் உங்களது முகத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்யவும். தினமும் இரவு தூங்கும் முன் இந்த எண்ணெயை கொண்டு உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். உங்களிடம் ஆலிவ் எண்ணெய் இல்லை என்றால் பாதம் எண்ணெய் பயன்படுத்தலாம்.