தூங்கும்போது தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதால் மரணம்? உண்மையான பின்னணி என்ன? 

Published : Feb 12, 2025, 04:14 PM IST

Mobile Phone Radiation And Sleep : தூங்கும்போது தலையணைக்கு அருகில் செல்போனை வைத்துவிட்டு தூங்குவது ஆபத்தா? அப்படி தூங்கலாமா? என்பது குறித்து இங்கு காணலாம். 

PREV
15
தூங்கும்போது தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதால் மரணம்? உண்மையான பின்னணி என்ன? 
தூங்கும்போது தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதால் மரணம்? உண்மையான பின்னணி என்ன?

பொழுதுபோக்கிற்கென தனியாக சாதனங்கள் எதுவும் கண்டுபிடிக்காத நேரங்களில் மக்கள் தூங்கும் முன் நிலா பார்ப்பது, வீட்டு முற்றங்களிக் அமர்ந்து கதையாடுவதென நேரம் கழிந்திருக்கும். இப்போதெல்லாம் எல்லோர் கையிலும் செல்போன் வந்துவிட்டது. போன் பார்க்காதவர்கள் டிவி பார்க்கிறார்கள். பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு செல்போன்தான். அதிலும் இளசுகளை சொல்லவே வேண்டாம். கேம் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். தூங்குவது, விளையாடுவது சாப்பிடுவது ரீபிட் என்ற போக்கில் தான் பல இளசுகள் இருக்கின்றனர். விதிவிலக்காக சிலர் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இப்படி போனில் மூழ்கி கிடப்பதால் அதை அப்படியே அருகில் வைத்தபடி தூங்கிவிடுவார்கள். 

25
செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு

பலருக்கும் தலையணைக்கு அருகில் செல்போனை வைத்துவிட்டு உறங்கும் பழக்கம் இருக்கிறது. இந்நிலையில் அது ஆபத்து என்றும் அவ்வப்போது யாராவது நமக்கு அறிவுரை சொல்வதை ஒருமுறையாவது கடந்திருப்போம். சமூக ஊடகங்களில் அவை மரணத்தை ஏற்படுத்தக் கூடும் என பார்வேர்டு மெசேஜ் பல வலம் வந்துள்ளன. உண்மையில் அப்படி நடக்குமா? செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை இந்த பதிவில் காணலாம்.

இதையும் படிங்க:  மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருதா? கட்டுப்படுத்த செம்ம டிப்ஸ்!!

35
தலையணைக்கு அருகில் செல்போன் ஆபத்தா?

தலையணை அருகில் செல்போன் வைத்திருப்பதால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அதிலும் சமூக ஊடகங்களில் சொல்வது போல மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு  குறைந்த ஆற்றலை கொண்டிருக்கும். நம்முடைய மரபணு அல்லது உடலில் உள்ள செல்களை நேரடியாக பாதிக்கும் ஆற்றல் இவற்றிற்கு இல்லை. தலையணைக்கு அருகில் செல்போன் வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு மரணத்தை ஏற்படுத்தும் என சொல்வதற்கு அறிவியல்ரீதியாக ஆதாரமே இல்லை. 

செல்போன்கள் குறைந்தளவில் அயனியாக்கம் செய்யப்படாத கதிர்வீச்சை வெளியிடுகின்றன. தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது தூக்கக் கலக்கம் அல்லது மன அழுத்தம் வர காரணமாகலாம். 

உலக சுகாதார அமைப்பு (WHO), சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) இரண்டுமே செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, மூளை பாதிப்புடன் தொடர்புடையது குறித்து எந்த ஆதாரங்களையும் இதுவரை கண்டறிந்து உறுதி செய்யவில்லை.  

45
செல்போன் புற்றுநோய்க்கு காரணமாகுமா?

சில பார்வேர்டு மெசேஜூகள் செல்போன்களால் மூளை புற்றுநோயை வரலாம் என பரப்படுகின்றன. ஆனால் கடந்த 20 வருங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் பரவலான பின்னரும் மூளை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. செல்போன் கதிர்வீச்சு  மூளைக்கு கெட்ட பாதிப்புகளை தருவதற்கான  அறிவியல் ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் போல வீரியமானது அல்லது. இவை மூளை செல்களை பாதிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டிருக்காது. செல்போன் தலையணைக்கு பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் போகலாம். செல்போன் திரையில் வரும் நோட்டிபிகேஷன் ஒலி, ஒளி போன்றவை உங்களுடைய உடலின் உயிரியல் கடிகாரத்தில் தலையிடலாம். இதனால் தரமான தூக்கம் கிடைக்காமல் போகலாம். 

இதையும் படிங்க:  தூக்கமின்மை உடலை எப்படி பாதிக்கிறது? அதை தவிர்க்க உதவும் 6 ஆயுர்வேத டிப்ஸ்!

55
தலையணைக்கு அருகே ஏன் வைக்கக் கூடாது?

தலையணைக்கு அருகில் செல்போன் வைக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணமும் ஒன்றுண்டு. அது செல்போன் அதிகம் வெப்பமாக இருப்பதாகும். ரொம்ப நேரம் பயன்படுத்துவதால் செல்போன் தொட்டாலே சுடும். இப்படி பயன்படுத்துவது ஆபத்து. தலையணைக்கு அருகாமையில், கட்டில் அருகே  சார்ஜ் செய்தால் அதிக வெப்பம் காரணமாக சில நேரம் தீப்பற்றலாம். தரம் குறைந்த அல்லது சேதமடைந்த சார்ஜர், சேதமடைந்த பேட்டரிகள் போன்றவை ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை. இந்த காரணங்களுக்காக செல்போனை அருகில் வைப்பதை தவிர்க்கலாம். நல்ல தரமான தூக்கத்திற்காக செல்போனை தலையணைக்கு அருகே, தலையணைக்கு கீழே வைக்கக்கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories