Diabetes : ராகியா, ஓட்ஸா? காலையில் சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

Published : Aug 07, 2025, 08:52 AM IST

சர்க்கரை நோயாளிகள் காலையில் ராகி அல்லது ஓட்ஸ் எதை சாப்பிட்டால் அவர்களுக்கு கூடுதல் நன்மைகள் என்பதை இங்கு காணலாம்.

PREV
14
Ragi vs Oats for Diabetes

பொதுவாக காலை உணவு என்பது மூளை உணவாகும். சுறுசுறுப்பாக இயங்க மூளைக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை காலை உணவுதான் தருகிறது. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாத உணவுகளை உண்ண வேண்டும்.

மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ பழகிவிட்டார்கள். அதற்கு மருந்து மட்டும் அல்ல; உணவுக் கட்டுப்பாடும் அவசியம் என விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.இந்தப் பதிவில் ராகி அல்லது ஓட்ஸ் எது உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என காணலாம்.

24
ராகியின் சிறப்புகளும், பாதகங்களும்!

ராகி, ஓட்ஸ் ஆகிய இரண்டுமே நார்ச்சத்து அதிகம் உள்ளவைதான். ஆனால் ராகியில் நார்ச்சத்துடன் கால்சியம், இரும்புச்சத்து ஆகிய தாதுக்களும் உள்ளன. இதில் மெதுவாக செரிமானம் அடையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. இதனால் இரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதுமட்டுமின்றி ராகியில் உள்ள பாலிபினால்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவும். ஆனால் பரபரப்பாக அரைத்து பயன்படுத்துவதே சிறந்தது. நீங்கள் ராகியை மாவாக மாற்றி சமைத்து உண்பது எளிதில் ஜீரணமாகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. மென்மையான மாவில் செய்த ராகி தோசைகள், கஞ்சி ஆகியவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

34
ஓட்ஸ் நன்மைகளும், பாதகங்களும்!

முழு ஓட்ஸை 2 அல்லது 3 துண்டுகளாக உடைத்து தயார் செய்யும் ஓட்ஸை எஃகு-வெட்டப்பட்ட அல்லது உருட்டப்பட்ட ஓட்ஸ் என்பார்கள். இவற்றில் பீட்டா-குளுக்கன் உள்ளது. இது குடலில் ஜெல்லை உருவாக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து வகையாகும். செரிமானத்தைத் தாமதப்படுத்தும். நீண்ட நேரம் பசியை கட்டுக்குள் வைக்க உதவும். உணவுக்குப் பின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். பதப்படுத்தப்பட்ட அல்லது சர்க்கரை சேர்த்த உடனடி ஓட்ஸை தவிர்க்க வேண்டும். எஃகு-வெட்டப்பட்ட ஓட்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட ஓட்ஸை காலை உணவாக உண்ணலாம்.

44
காலை உணவுக்கு எது சிறந்தது?

தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு உங்கள் விருப்பம் என்றால் ராகியை உண்ணலாம். முளைகட்டிய தானியங்கள் அல்லது தயிருடன் உண்ணலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஓட்ஸ் நல்ல தேர்வாகும். அளவாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் புரதச்சத்துக்கு பயிர் வகைகள், முட்டை எடுத்து கொள்ளலாம். இந்த இரண்டு உணவை மட்டுமே எடுத்து கொள்ளாமல் மற்ற தானியங்களையும் உண்ணவேண்டும். அதுவே ஊட்டச்சத்து சமநிலையை வழங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories