Night Shift Work : நைட் ஷிப்ட் வேலையால் பெண்களின் கருத்தரிப்பில் சிக்கல் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Published : Aug 06, 2025, 05:04 PM IST

நைட் ஷிப்ட் வேலையால் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் பாதிக்குமா? கருத்தரிப்பில் சிக்கல் எழுமா? முழுவிவரங்களை இங்கு காணலாம்.

PREV
15

இன்றைய நவீன உலகம் நேரம், காலமின்றி சுழலத் தொடங்கியுள்ளது. இரவு ஓய்வு நேரம் என்பது மாறி வேலை செய்யும் நேரமாக மாறிவிட்டது. உடலில் உயிரியல் கடிகாரமே அதன் சமநிலையை இழந்து உடல்நலப் பிரச்சனைகள் பெருகி வருகின்றன.

இரவு நேர பணியால் பெண்களின் உயிரியல் அமைப்பு, ஹார்மோன் சுரப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. அரை குறை தூக்கம், மோசமான உணவு பழக்கம், மன நிலை உள்ளிட்ட அனைத்துமே நைட் ஷிப்ட் வேலையின் விளைவுதான். தொடர்ந்து இரவில் வேலை செய்தால் இனப்பெருக்க அமைப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தப் பதிவில் நைட் ஷிப்ட் வேலையால் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கும்? கருத்தரிப்பில் சிக்கல் எழுமா? ஆகியவற்றின் முழுவிவரங்களை இங்கு காணலாம்.

25

மனிதர்களின் உடலில் காலையில் எழுவது முதல் இரவில் தூங்குவது வரைக்கும் சரியான இயக்கத்திற்கு காரணம் இயற்கை உயிரியல் கடிகாரமான சர்க்காடியன் ரிதம் தான். இதுவே பசி உள்ளிட்டவற்றை ஒழுங்கு செய்யவும் காரணமாகும். இது சரியாக இயங்க தூக்க சுழற்சி சரியாக இருக்க வேண்டும். இரவில் தூங்காமல் வேலை செய்பவர்களுக்கு இந்த ரிதம் சரியாக இயங்குவதில்லை. இதனால் உடலில் பிரச்சனைகள் தலைதூக்கும்.

35

பெண்களின் ஆரோக்கியம்

பெண்களின் உடலில் சர்க்காடியன் ரிதம் பாதிக்கும்போது இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், லூட்டினைசிங் உள்ளிட்ட இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பு மாறுகிறது. இதனால் அண்டவிடுப்பு சுழற்சி மாறுகிறது. இரவில் கண் விழித்து பணிபுரியும் பெண்களுக்கு கருவுறுதல் வாய்ப்புகள் குறைவதாகச் சொல்லப்படுகிறது. ஆய்வுகளிலும் நைட் ஷிப்டில் வேலை செய்யும் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், அண்டவிடுப்பு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், தாமதமான கர்ப்பம் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றன.

45

ஹார்மோன்கள் தாக்கம்

நைட் ஷிப்ட் வேலையால் மெலடோனின் ஹார்மோன்களின் சுரப்பு பாதிக்கிறது. இது தூக்கத்திற்கு மட்டுமின்றி, இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மெலடோனின் சுரப்பில் ஏற்படும் பாதிப்பு மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற நிலையை உண்டாக்கும். இது மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தம் கூடும்.

இரவு தூக்கம் பாதிப்பதால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரிக்கும். இது அண்டவிடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். தரமில்லாத தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பையும் குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

55

இதை செய்யனும்!

இரவு வேலை செய்தால் அதன் பின்னர் 7 முதல் 8 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தால் முறையாக மருத்துவரை அணுகி சிகிச்சை செய்ய வேண்டும். யோகா, தியானம், உடற்பயிற்சியை தவறாமல் செய்தால் மனச்சோர்வு குறையும். வைட்டமின் டி, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் குறைபாட்டினை களைவது கருவுறுதல் வாய்ப்பை அதிகப்படுத்தும். நைட் ஷிப்ட் வேலைகளை குறைத்து அல்லது முற்றிலும் தவிர்த்து, பகலில் வேலை செய்வது கருவுறுதலுக்கு ஏற்றது.

Read more Photos on
click me!

Recommended Stories