இன்றைய நாட்களில் பெரும்பாலான கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி உதிர்தல், உடைதல், நரைத்தல், வறட்சியாகுதல் மற்றும் பொடுகு தொல்லை போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால், இதற்கு இயற்கையான பல தீர்வுகளும் உள்ளன.
அந்த வகையில், கூந்தல் பராமரிப்பில் ஒன்றுதான் தலை முடியை மோரில் அலசுவது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். மாறாகவும் கூட தோன்றலாம். ஆனால் உங்களது தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பதிவில், மோர் கொண்டு தலை முடியை அலசுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.