Dandruff : பொடுகு தொல்லையை ஒழிக்க முடியலயா? முதல்ல இந்த வைட்டமின் குறைபாட்டை சரி பண்ணுங்க!!

Published : Aug 01, 2025, 01:31 PM IST

பொடுகு தொல்லைகு எந்த வைட்டமின் குறைப்பாடு காரணம் என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
15

பொடுகு தொல்லை பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். பொடுகு வெளியே தெரிந்தால் பலரும் அவமானமாக கருதுகிறார்கள். ஆகவே பலரும் பொடுகு பிரச்சனையை போக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் உங்களது கூந்தலின் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.

25

சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட போன்ற பல காரணங்களால் தான் பொடுகு வரும் என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுபோல, நம் உடலில் இருக்கும் சில வைட்டமின்கள் பற்றாக்குறை காரணமாகவும் பொடுகு பிரச்சனை ஏற்படும் தெரியுமா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுபோல ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் சில சமயங்களில் பொடுகு பிரச்சனை ஏற்படுமாம்.

35

பொடுகு என்றால் என்ன? : நம்முடைய உச்சந்தலையின் இறந்த, வறண்ட செல்கள் தான் பொடுகு. இது ஒரு பூஞ்சையால் உற்பத்தியாகிறது. ஒரு நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், அவருக்கு இந்த பூஞ்சை தொற்று அதிகரிக்கும் பிறகு அது பொடுகு பிரச்சனையை ஏற்படுத்தும்.

45

இந்த வைட்டமின் குறைபாட்டால் பொடுகு வருகிறது? : பொடுகு பிரச்சனைக்கு வைட்டமின் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம் குறிப்பாக வைட்டமின் பி (பி2, பி3, பி6 மற்றும் பி7) மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணங்களாலும் பொடுகு ஏற்படும். இது தவிர துத்தநாகம் (zinc) குறைபாடும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும்.

55

வைட்டமின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வழிகள் :

பி வைட்டமின்கள் - கோழி, இறைச்சி, மீன், முட்டை, முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகளை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் டி - மீன், சீஸ் மற்றும் முட்டையின் மஞ்ச கொலு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். அதுபோல தினமும் காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்கவும்.

துத்தநாகம் - விதைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகளை அதிகமாக சாப்பிடுங்கள்.

உங்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் அதற்கு குறிப்பிட்ட காரணத்தை கண்டறிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களது உணவு முறையில் மாற்றங்கள் செய்யுங்கள். முயற்சிகள் பல செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் உடனே மருத்துவர் அணுகுவது தான் நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories