பேன் நம் தலையில் உருவாகும் ஒருவித சிறிய பூச்சி. சில சமயங்களில் இது கண் புருவத்திலும், இமைகளிலும் கூட வரும். இது நம் உடலில் இருந்து ரத்தத்தை உணவாக உறிஞ்சு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இதனால் உச்சந்தலையில் அரிப்பு. இத்தகைய சூழ்நிலையில், இந்த நவீன காலத்தில் தலையில் இருக்கும் பேனை போக்க லோஷன் ஷாம்பூக்கள் விற்பனையாகின்றன. சில சமயங்களில் அதிக வீரியம் உள்ள மருந்துகளை கூட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அவற்றிற்கு பதிலாக, இயற்கை முறையில் அவற்றை அளிக்க கூடிய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.