Neem For Acne : அடிக்கடி முகப்பருக்கள் வருதா? அப்ப வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க

Published : Jul 30, 2025, 06:41 PM IST

உங்களது முகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறது என்றால் வேப்பிலையில் இந்த ஒரு பொருள் கலந்து பயன்படுத்துங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

PREV
15

முகப்பரு என்பது ஆண் மற்றும் பெண்கள் என இருவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. முகப்பரு வந்தால் முகத்தின் அழகு தான் கெடும். இந்த பரு பிரச்சனையிலிருந்து விடுபட பலர் பலவிதமான வீட்டு வைத்தியங்களை தேடுகிறார்கள். நீங்களும் இதே பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பக்க விளைவு இல்லாத வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க விரும்பினால், வேப்பிலை உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.

25

ஆம், வேம்பு ஆயுர்வேத பண்புகளை கொண்டுள்ளன. வேப்பிலை முகப்பருவை குணமாகவும், அது மீண்டும் வருவதை தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்தை வழங்கும்.

35

சருமத்திற்கு வேப்பிலையின் நன்மைகள் :

- வேப்பிலையில் பண்புகள் சருமத்தின் எரிச்சல், அரிப்பு, வீக்கம், சிவத்தல், வெடிப்பு மற்றும் முகப்பருவை திறம்பட குறைக்கிறது.

- இது தவிர வேப்பிலையில் அதிகளவு பைட்டோ கெமிக்கல் சேர்மங்கள் உள்ளது. அவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், முகத்தில் பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும்.

- வேப்பிலை மட்டுமல்ல அதன் பழம் மற்றும் பூக்களும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் பழசாறுகள் காயங்களை குணப்படுத்த உதவும் மற்றும் முகப்பரு வடுக்களை மறைய செய்யும். வேப்பம் பூக்கள் சரும எரிச்சலை குறைக்கும்.

45

முகப்பருவை நீக்க வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?

வேம்பு மற்றும் மஞ்சள் இரண்டிலும் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் மற்றும் சருமத்தின் எரிச்சலை ஆற்றும். எனவே வேப்பிலையை பேஸ்ட் போலாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடுங்கள். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

55

நினைவில் கொள்

- முகத்தில் பருக்களை இருக்கக் கூடாது என்று விரும்புபவர்கள் சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்க ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கண்டிப்பாக முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

- முக்கியமாக உங்களது சரும வகைகள் ஏற்ப ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories