பாத வலி என்பது யாருக்கும் எந்த நேரத்திலும் வரும் ஒரு பொதுவான பிரச்சினை. அதிகப்படியான உழைப்பு அல்லது வேறு எந்த பிரச்சினையாலும் கால் வலி வரும். ஆனால் சிலருக்கு இந்த வலியானது அடிக்கடி ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக இரவு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்கும் போது சிலருக்கு திடீரென பாதகளில் வலி ஏற்படுகிறது. இதனால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் போகிறது. இந்த வலியானது இரண்டு நாட்கள் நீடித்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதுகுறித்து பயப்படவும் வேண்டாம். அதுவே ஒவ்வொரு நாளும் நீடித்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எனவே இரவில் பாத வலி ஏன் உண்டாகிறது? அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
27
சர்க்கரை அளவு அதிகரித்தால்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதை கட்டுப்படுத்தாவிட்டால் நரம்பு மண்டலம் சேதமடையும். இதில் உங்களது பாதகள் உள்ள நரம்புகளும் அடங்கும். நிலமே மோசமடைந்தால் பாதகளில் கடுமையான வலி ஏற்படும். சில சமயங்களில் பாதகளில் உணர்வின்மை உணர்வு ஏற்படும். மேலும் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பாதங்களில் கூச்ச உணர்வு, வலி, எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
37
தவறான தோரணை
சில சமயங்களில் நீங்கள் உட்காரும் வீதம் அல்லது அணியும் காலணிகள் போன்றவற்றாலும் பாத வலி உண்டாகும். நீங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ நின்றாலோ அல்லது நீண்ட தூரம் நடப்பது அல்லது ஓடுதல் காரணமாக கூட பாத வலி ஏற்படும். ஆனால் இந்த வலியை மருந்துகள் உட்கொள்வதன் மூலம் போக்கிவிடலாம்.
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் அதன் அறிகுறிகள் பாதங்களில் தான் தோன்றும். அதாவது அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக கால்களில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இதன் காரணமாக பாதங்களில் வலி ஏற்படும்.
57
நரம்புகளில் அழுத்தம் :
உங்களது இடுப்புக்கு அருகில் இருக்கும் சிஆர்டிக்கு என்னும் நரம்பில் ஏற்படும் அழுத்தம் பாதங்களில் வலியை ஏற்படுத்தும். அதுபோல பாதத்தில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டாலும் பாத வலியை உண்டாக்கும்.
67
ஃபைப்ரோமியால்ஜியா (fibromyalgia)
இது கடுமையான வலியை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட நிலை ஆகும். ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான காரணங்கள் மரபியல், தொற்று, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான அதிர்ச்சிகள் போன்றவை இதில் அடங்கும். இது பாதம் மற்றும் உடலின் பிற உறுப்புகளில் வலியை ஏற்படுத்தும்.
77
மோர்டனின் நியூரோமா (Morton's neuroma)
மோர்டனின் நியூரோமா என்பது பாதத்தில் ஏற்படும் ஒரே நிலையாகும். இது நரம்பு திசுக்கள் தடித்தல், வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக பாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது கால் விரல்களுக்கு இடையே ஏற்படும். இந்த வலியானது சில சமயங்களில் இரவு அல்லது பகலிலும் உண்டாகும். நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதங்களில் அழுத்தம் ஏற்பட்டால் இந்த வலி இன்னும் மோசமாகும்.