இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தொங்கும் தொப்பையால் அவதிப்படுகிறார்கள். உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாமல் ஆகியவையே இதற்கு காரணம்.
தொங்கும் தொப்பையானது தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது இது இதய நோய், கல்லீரல் பிரச்சனை மற்றும் நீரிழிவைத் தூண்டும். இத்தகைய சூழ்நிலையில், தொங்கும் தொப்பையை குறைக்க உங்களது காலை வழக்கத்தில் சில ஆரோக்கியமான பழக்கங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.
26
1. லெமன் வாட்டர் :
தினமும் உங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீருடன் தொடங்குங்கள். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், உடலை நீரேற்றமாக வைக்கும் சிறந்த செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலிலிருக்கும் நச்சுக்களை அகற்றும். குறிப்பாக கொழுப்பை இருக்கும் செயல்முறைகளை அதிகரித்து எடையை வேகமாக குறைக்க இந்த பானம் பெரிதும் உதவுகிறது.
36
2. உடற்பயிற்சி செய்யுங்கள் :
வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது அதிக தீவிரப் பயிற்சி என எது வேண்டுமானாலும் செய்தாலும் உங்களது உடலில் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும். குறைந்தது 30 நிமிடங்களாவது தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
முட்டை, கிரேக்க தயிர், புரோட்டீன் ஸ்மூர்த்தி போன்ற புரதம் நிறைந்த உணவுகளை காலை உணவாக சாப்பிடுங்கள். புரதமானது திருப்தி உணர்வைத் தரும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
56
4. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் :
காலை உணவில் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது தொங்கும் தொப்பையை குறைக்க உதவும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து உணவானது பசியை கட்டுப்படுத்தி வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். மேலும் செரிமானத்தையும் ஊக்குவிக்கும்.
66
5. நல்ல தூக்கம் அவசியம் :
ஆரோக்கியமான உடல் மற்றும் எடைக்கு போதுமான தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் ஹார்மோன்கள் சீர்குலைந்துவிடும். இதனால் பசி அதிகரிக்கும் மற்றும் உடலில் கொழுப்பு சேரத் தொடங்கும். எனவே வயிற்றை சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்க தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து விஷயங்களை தினமும் காலையில் செய்வதை பழக்கமாக்கி கொண்டால் தொங்கும் தொப்பை விரைவில் கரைந்து விடும்.