பொதுவாக காலை எழுந்ததும் நிறைய பேர் டீ, காபி குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது தவறான பழக்கம். ஏனெனில் காலை தூங்கி எழுந்ததும் நம்முடைய உள்ளுறுப்புகளானது திறம்பட செயல்படுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். ஆகையால், காலை எழுந்ததும் நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிட சில உணவுகள் சாப்பிட வேண்டும். மேலும் காலை எழுந்த பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து தான் காலை உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க விரும்பினால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். அவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
26
ஊற வைத்த பாதாம் :
பாதாமில் நார்ச்சத்து, ஒமேகா- 3, ஒமேகா- 6 கொழுப்பு அமிலங்கள், புரோட்டின், வைட்டமின் ஈ, மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை இரட்டிப்பாக பெற ஊற வைத்த பாதாமை சாப்பிடுங்கள். அதுவும் தோல் நீக்கிய பாதாமை சாப்பிடுங்கள். ஏனெனில் பாதாமின் தோலில் டானின்கள் உள்ளதால், அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தி விடும்.
36
ஊற வைத்த உலர் திராட்சை :
உலர் திராட்சையில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெற பாதாம்மை போல இதையும் ஊறவைத்து சாப்பிடுங்கள். மேலும் இதில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே வழங்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும் மற்றும் இனிப்புகள் மீதிருக்கும் நாட்டத்தையும் குறைக்கும்.
சியா விதையில் நார்ச்சத்து, கால்சியம், புரோட்டின், ஒமேகா- 3கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த சியா விதையை சாப்பிட்டு வந்தால் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். இதனால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். மேலும் செரிமான மண்டலத்தையும் மேம்படுத்தும்.
56
தேன் மற்றும் சூடான நீர் :
தேனில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை குரலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைக்கும். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு ஒருவித ஆற்றலையும் வழங்கும்.
66
அருகம்புல் ஜூஸ் :
நம்முடைய முன்னோர்கள் நீண்ட நாள் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்கள் அருகம்புல் ஜூஸ் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலம் மேம்படும், மலச்சிக்கல் பிரச்சனையை நீங்கும் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்றவையும் சரியாகும். முக்கியமாக இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கலிலிருந்து செல்களை பாதுகாக்கும்.