தாமரை வேரின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், என்பதற்கான 7 காரணங்கள்..!

First Published | Oct 27, 2022, 8:01 AM IST

Lotus Root Health Benefits: தாமரை பூவை போலவே அதன் தண்டு, வேர் போன்றவற்றிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தாமரை வேர் ஆரோக்கிய நன்மைகள்: இதில், வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, மாங்கனீசு மற்றும் தனிமங்கள் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும், தாமரை வேர் புரதம் மற்றும் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதுமட்டுமின்றி சில நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது. அந்த வகையில் தற்போது இதனை உட்கொள்வதால்  கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

தாமரை வேர் என்பது தாமரைச் செடியின் கீழ் வளரக் கூடிய பகுதியாகும். தாமரை மலரின் தடிமனான மிருதுவான அமைப்பு உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது வடிவத்தில் நீண்ட பூசணிக்காயை ஒத்திருக்கிறது. தாமரை வேர் ஒரு உண்ணக்கூடிய காய்கறியாகும், இது லேசான இனிப்பு சுவை கொண்டது. தாமரை வேரில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

Tap to resize

வேரை சுத்தம் செய்து,வேகவைத்து சமைக்கலாம். இது உலர்ந்த மற்றும் தூள் வடிவில் ஒரு மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியகளின் வீடுகளில், தாமரை வேர் கறி, கோஃப்தா அல்லது ஊறுகாய் வடிவில் சமைக்கப்படுகிறது. 

 மேலும் படிக்க..கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்க

தாமரை வேர் செரிமானத்தை எளிதாக்குகிறது

தாமரை வேரில் நார்ச்சத்துக்கள் இருப்பது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால், மலச்சிக்கலை போக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. தாமரை வேரின் இந்த பண்பு பசியை உணர விடாது. இதனால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தாமரை வேர் அழற்சியை போக்க:

தாமரை வேர் பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச அழற்சியை போக்க உதவுகிறது. 

 மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது:

தாமரை வேர்கள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதயத்தில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. தாமரை வேரில் பைரிடாக்சின் இருப்பது இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டீன் அளவை நிர்வகிக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது:

உங்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்கிறது. மேலும், தாமரை வேரை சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து குறைபாடும் நீங்கும். 

தாமரை வேர் மன அழுத்தத்தை குறைக்கிறது

தாமரை வேரில் வைட்டமின் பி உள்ளது, இதில் பைரிடாக்சின் என்ற கலவை உள்ளது. இந்த கலவை மூளையில் உள்ள நரம்பு ஏற்பிகளுடன் தொடர்பு கொள்கிறது, இது மன அழுத்தம், எரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவற்றைக் குறைக்கும்.


 மேலும் படிக்க..கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்க

Latest Videos

click me!