ஹேர் ஸ்ட்ரெயிட்னர் பயன்படுத்துபவருக்கு வரும் உயிர்கொல்லி நோய்- ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி..!!

Published : Oct 26, 2022, 11:15 AM IST

தலைமுடிக்கு செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ஹேர் ட்ரையரை கொண்டு பயன்படுத்தும்  பெண்களுக்கு உயிர்க்கொல்லி  நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது, சமீபத்தில்  நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  

PREV
18
ஹேர் ஸ்ட்ரெயிட்னர் பயன்படுத்துபவருக்கு வரும் உயிர்கொல்லி நோய்- ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி..!!

உலகளவில் மார்பக புற்றுநோய்க்கு பிறகு பெண்களிடையே கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.இது தொடர்பாக அமெரிக்காவில் மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  அதற்காக பலதரப்பட்ட வயதுடைய பெண்கள், நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்ட பெண்கள் உள்ளிட்டோர் உட்படுத்தப்பட்டனர். 
 

28

அதன்மூலம் தலைமுடிக்கு செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ஹேர் ஸ்டைல் பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பிட்ட இந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் கருவிகளில் காணப்படும் ரசாயனம், ஹார்மோன்  சமநிலையன்மை மற்றும் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பை தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க்கான பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

38

நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னல் மேற்கொண்ட இந்த ஆய்வில் மார்பகப் புற்றுநோய் அல்லாத பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் ஹேர் ஸ்டைலிங் செய்வது,  முடிக்கு கலர் செய்வது,  முடிக்கு நிரந்தரமாக கலர் செய்வதுஉள்ளிட்ட பல்வேறு அழகு சார்ந்த நடவடிக்கைகளை  மேற்கொள்பவர்களாக இருந்தனர். குறிப்பிட்ட அழகு சார்ந்த நடவடிக்கைகளை எத்தனை முறை பயன்படுத்துகின்றனர், எவ்வளவு பயன்படுத்துகின்றனர் உள்ளிட்ட அளவீடுகளில் ஆய்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

48

 அதைத்தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்ட பெண்களில் எத்தனை பேர் புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகளுடன் உள்ளனர் மற்றும்  அதற்கான வாய்ப்புகள் இல்லாதோர் என பிரிக்கப்பட்டனர். அதனடிப்படையில் ஹேர் ஸ்டைல் கருவியைப் பயன்படுத்தி அழகு நடவடிக்கையை மேற்கொள்ளும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. 

58

அதே சமயத்தில் மற்ற அழகு சாதன பொருட்களை வைத்து தலைமுடியை அழகு செய்து கொள்ளும் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்புக்கான ஏற்படுவதற்கான வாய்ப்பு  இல்லை என்பது தெரியவந்தது. மேலும் உடல் உழைப்பு குறைவாக கொண்ட பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!

68

மாதவிடாய் இல்லாத நேரங்களில்,  பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் கசிவது,   கருப்பை புற்றுநோய் பாதிப்புக்கான முக்கிய அறிகுறியாக உள்ளது. மெனோபாஸ் நிலைக்குப் பிறகும் தொடர்ந்து பிறப்புறுப்பில் ரத்தம் வழிவது அடுத்த அறிகுறியாக உள்ளது. அடிவயிற்றில் வலி ஏற்படுவது,  அவ்வப்போது பிடித்து பிடித்து வலிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் பெண்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. 

78

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 70 ஆயிரம் பெண்கள் கருப்பை புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது தெரியவந்துள்ளது.  இந்தியாவிலும் இந்த நோய் பாதிப்பு பல பெண்களிடையே கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.  பிறப்புறுப்பில் மாதவிடாய் இல்லாமல் தொடர்ந்து ரத்தம் வழிவது நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

வெறும் வயிற்றில் பச்சையாக ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள்- அப்புறம் அதிசியம் நடக்கும் பாருங்கள்..!!

88

உடலில் வேறுபட்ட அறிகுறிகள் அவ்வப்போது  அவ்வப்போது தோன்றும் போது அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.  முடிந்த வரையில் புற்றுநோய் பாதிப்பு சீக்கிரமாகவே கண்டுபிடிக்கப்பட்டால் தீர்வு உடனடியாக கிடைக்கும்.  பாதிப்பு அதிகமாகி,  கையை மீறிச் சென்று விட்டால்  உயிருக்கு  ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். 
 

click me!

Recommended Stories