தீபாவளி முடிந்துவிட்ட நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. தடைகளை தாண்டியும், நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்ததால் பல்வேறு பகுதிகள் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு நாளைக்கு 16 சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ, அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதில் இருந்து உங்கள், நுரையீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில யோகா ஆசனங்களை இங்கு காணலாம்.
கடைபிடிப்பது எப்படி?
முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.
பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, மூன்று முறை வலிமையாக இரும வேண்டும். இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.
வயிற்றின் மூலம் சுவாசம்
இந்த யோகா ஆசனம் ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் மீட்டமைக்கவும் உதவுகிறது.
எப்படி செய்வது
உங்கள் முழங்கால்களை வளைத்து வைத்து, உங்கள் முதுகு தரையில் அழுத்தும்படி படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் விலகி இருக்க வேண்டும். ஆனால் உங்கள் முழங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டும். உங்கள் வலது உள்ளங்கையை எடுத்து உங்கள் வயிற்றில் வைக்கவும். மூச்சை உள்ளிழுக்கவும்; ஆழ்ந்த மூச்சை எடுத்துவிடுங்கள்.
ஒரு கை பிளாங்
ஒரு சமதளத் தரையில் உங்களது முதுகினை நேராக நிமிர்த்தி வைத்து, கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கையினை மேல் நோக்கி உயர்த்தி 30 விநாடிகள் நிற்க வேண்டும். இதேபோல், மறு பக்கமும் செய்ய வேண்டும். ஒரு கையினை மடக்கி மறு கையினை உயர்த்தும் போது முதுகு கீழே படாமல் இருப்பது அவசியம். இது முதுகுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும். வலிகளைக் குறைக்கும்.