நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு மசாலாவை ஒரு சிட்டிகை வெந்நீரில் கலந்து, குடித்தால் தலைவலியில் இருந்து சளி மற்றும் இருமல் வரை நிவாரணம் கிடைக்கும். அது என்ன மசாலா, அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பெருங்காயம் நம் உணவை கூடுதலாக சுவையாக்க உதவுவதோடு, நம் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது. அதன்படி உங்கள் உடல் பருமனை பெருங்காயம் எவ்வாறு குறைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதேபோல் இந்த பெருங்காயம் உங்களின் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் வயிற்றுப் பொருமல், ஒற்றைத் தலைவலி பிரச்சனைசரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சளி, இருமல் பிரச்சனை இருந்தால், வெந்நீர் மற்றும் பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுவாச பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், பெருங்காயத்தை கண்டிப்பாக பருக வேண்டும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைக்கு, பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து தொப்புளை சுற்றி தேய்ப்பது மற்றொரு வழியாகும்.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பெருங்காயம் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பெருங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்துவது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.