Banana: ஒரு வாரம் கழித்து கூட வாழைப்பழம் அழுகாமல் இருக்க..இந்த சூப்பர் டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

First Published | Oct 24, 2022, 7:02 AM IST

Banana: பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை நீண்ட நாள் அழுகாமல் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

உடல் எடை குறைப்பில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இதனை சாப்பிடுவதால் இதய சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராது. இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை அழுகாமல் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகள்:

வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, போலேட், நியாசின், ரிபோஃபிளேவின் மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாதுக்களும், அதிகளவு ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது.  இவை உடல் செயல்பாட்டிற்கு போதுமான ஆற்றலை தருகிறது. 

Tap to resize

வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க குறிப்புகள்

வாழைப்பழம் குறைந்த விலையில் மொத்தமாக வாங்கும் போது, ​​அதை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது  அவசியம். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். எனவே, நீண்ட நாட்களுக்கு வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவில் பார்க்கலாம்.

 மேலும் படிக்க...அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்க ஆசையா, வெறும் 1 ரூபாய் செலவில் இதை வாங்கினால் போதும்...!

நாம் மற்ற உணவுகளை ஃப்ரெஷ்ஷாக வைக்க ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம் ஆனால் வாழைப்பழத்தை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்க கூடாது.  எனவே, வாழைப்பழத்தை அழுகாமல் பாதுகாக்க அதனை தொங்கவிடும் வகையில் ஹேங்கர்களை வாங்கலாம்.  

அதேபோன்று, வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க இந்த வேக்ஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இதற்காக, வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தினால், சுற்றி அதனை முழுமையாக மூடி வைக்கலாம்.

வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க வைட்டமின் சி மாத்திரையை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும். 

வாழைப்பழம் அதிக நாட்கள் அழுகாமல் இருக்க வேண்டுமானால், அதன் தண்டு பகுதியில் பிளாஸ்டிக் அல்லது செல்லோ டேப்பை சுற்றி மூடி வைத்தால், வாழைப்பழம் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.

 மேலும் படிக்க...அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்க ஆசையா, வெறும் 1 ரூபாய் செலவில் இதை வாங்கினால் போதும்...!

Latest Videos

click me!