தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

First Published Oct 19, 2022, 1:21 PM IST

Drinks For Glowing Skin: இயற்கை முறையில் உங்கள் முக அழகை பெறுவதற்கு நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய பானம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பண்டிகை நாட்களில் பெண்கள் தங்கள் முகம் பொலிவு பெற விரும்புகிறார்கள். இதனை சரிசெய்ய விலை உயர்ந்த பேஷியல், பேஸ் கிரீம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் முழுவதும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால், இவை உங்கள் சருமத்தின் இயற்கையான பொலிவை  தடுக்கும்.  மேலும், பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...செலவே இல்லாமல் வீட்டிலேயே கோல்டன் பேஷியல் வெறும் 5 நிமிடத்தில் போடலாம்,இந்த டிப்ஸ் தெரிந்தால் முகம் ஜொலிக்கும்

எனவே, இயற்கையான முறையில் அழகை பெருவது தான் சிறந்த வழியாகும். அப்படியாக, இயற்கை முறையில் உங்கள் அழகை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

tomato juice

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக, இந்த ஒரு வாரம் முழுவதும்  தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள். முகத்தில் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். முகத்தில் நிறம் மாற்றத்தை தடுக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

இஞ்சி, எலுமிச்சை ஜூஸ்:

எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.  அதில், கொஞ்சம் இஞ்சி சேர்த்து குடிக்கும் போது உடலுக்கு நன்மை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முகத்தை சூரியனிடமிருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க...செலவே இல்லாமல் வீட்டிலேயே கோல்டன் பேஷியல் வெறும் 5 நிமிடத்தில் போடலாம்,இந்த டிப்ஸ் தெரிந்தால் முகம் ஜொலிக்கும்

ஆரஞ்சு பழத்தின் பயன்கள்:

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. இதனால் தினமும் குடிப்பது உங்கள் முகம், தேவதை போல் ஜொலிக்க வைக்கும் .உடலில் ரத்ததை சுத்திகரிக்கவும் உதவுவதால் சருமத்தின் பளபளப்பை இயல்பாகவே பெறலாம்.

நெல்லிக்காய் சாறு:

நெல்லிக்காய்  சாறுவில் இருக்கும், வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முகத்தை பொலிவாக்க உதவுகிறது. ஒருவாரம் சரியான அளவுகளில் நெல்லிக்காய் சாறு எடுத்து கொண்டால், இது முகத்தை மினுமினுக்க செய்யும். பண்டிகை நாட்களில் நீங்கள் ஜொலிப்பீர்கள்.

பீட்ரூட் ஜுஸ்:

பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். சருமத்துக்கு போன்று உடலுக்கும் வேண்டிய சத்து கொடுக்கவல்லது.  இதில் நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பித்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, எனவே, இதனை ஜூஸ் போட்டு ஒரு வாரம் குடுத்து வந்தால், முகம் பொலிவடையும். சருமம் பளபளப்பாக மாறும்.முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசத்தை காணுங்கள். 

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும் முகத்தில் நிறம் மாற்றத்தை தடுக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். 

click me!