வீகன் டயட் பின்பற்றும் நபரா நீங்கள்..? அப்போ..! மிஸ் பண்ணாமல் இந்த கால்சியம் நிறைந்த உணவு எடுத்துக்கோங்கோ..!

Published : Oct 17, 2022, 07:01 AM IST

Vegan Calcium: வீகன் டயட் பின்பற்றுபவர்கள் இந்த கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்னெ பொருட்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
16
வீகன் டயட் பின்பற்றும் நபரா நீங்கள்..? அப்போ..! மிஸ் பண்ணாமல் இந்த கால்சியம் நிறைந்த உணவு எடுத்துக்கோங்கோ..!

கால்சியம் என்பது நமக்கு தினசரி தேவைப்படும் ஒரு ஊட்டச்சத்து ஆகும், எலும்புகள், பற்கள் உறுதிக்கு, தசைகளின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து மிகவும் அவசியமாகும். எனவே, உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க ,..World Food Day 2022: உலக உணவு தினம் எப்படி வந்தது..? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது..?

26

நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, கால் வலி, தசைப்பிடிப்பு, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் பாதிப்புகள் ஏற்படும்.  எனவே, உணவின் மூலம் தினசரி உங்களுடைய கால்சியம் அளவைப் பெற, நீங்கள் ஒரு கிளாஸ் பாலை குடிப்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சைவ உணவைப் பின்பற்றுபவர்களிலும், பால் குடிக்க விரும்பாதவர்கள், வீகன் டயட்டைப் பின்பற்றுபவர்களுக்கும், பாலுக்கு நிகரான கால்சியம் அதிகம் உள்ள 4 பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

36

ராகி 

சைவ உணவைப் பின்பற்றுபவர்கள் ராகியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலில் கால்சியம் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும். பொதுவாக ராகி கஞ்சி மற்றும் ரொட்டி ஆகியவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.  

மேலும், கேழ்விரகு, கொள்ளு, ராஜ்மா போன்றவற்றில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கின்றது.  

 

46

சீரகம்

சீரகத்தின் பயன்பாடு நம் உணவின் சுவையை மிகவும் அதிகரிக்கிறது, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகம் மசாலாவாக இருந்தாலும், இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது. தண்ணீரில் சீரகத்தை கொதிக்க வைத்து, வெந்நீர் ஆறிய பிறகு, தண்ணீருக்கு பதிலாக சீரகத் தண்ணீரைக் குடிக்கலாம்.

56

எள்

எள் சாப்பிடுவது கால்சியம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஒரு டீஸ்பூன் எள்ளில் சுமார் 88 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. லட்டு, கஜக் மற்றும் பல இனிப்புகள் உட்பட பல வகைகளில் இதை உண்ணலாம்.. இவை உடலுக்கு தேவையான தெம்பை கொடுக்கிறது. 

66

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கால்சியம் சத்து பெற, நெல்லிக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் சாறு உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க ,..World Food Day 2022: உலக உணவு தினம் எப்படி வந்தது..? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது..?

Read more Photos on
click me!

Recommended Stories