நாம் என்னதான் சமையல் அறையில் கவனமாக சமைத்தாலும், சில நேரம் நம்மளை மீறி உணவு பொருட்கள் கருகி போனது உண்டு, இந்த உணவு பொருட்களை எளிமையாக சரி செய்வது எப்படி..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எனவே, சமைக்கும் போது மிகவும் பொறுமையாக இருப்பது அவசியம். அதிலும் குறிப்பாக கருகிய உணவை சரி செய்வதில் ஏற்படும் பிரச்சனை அனைவரின் சமையலறையிலும் உள்ளது.
நாம் சமைக்கும் போது உணவு பொருட்கள் கருகி விட்டால் செய்ய வேண்டியவை:
சமையல் பாத்திரத்தை மாற்றவும்:
பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டும் தீஞ்சு போய் இருந்தால், பாத்திரத்தை உடனே மாற்றுவது எளிதான தீர்வாகும்.
அமிலப் பொருட்களைச் சேர்க்கவும்:
உணவு சிறிது கருகி போய் இருந்தால், அமிலப் பொருட்களைச் சேர்த்து, சுவையை சமப்படுத்தவும். ரெசிபியை பொறுத்து நீங்கள் எலுமிச்சை சாறு, வினிகர், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின் அல்லது தக்காளி போன்றவற்றை சேர்க்கலாம்.
உருளைக்கிழங்கு பயன்படுத்தவும்:
உருளைக்கிழங்கு கருகி போன எந்த உணவையும் சரி செய்ய பயன்படுகிறது. சில உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, உணவு கொதித்த பாத்திரத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து உருளைக்கிழங்கை அகற்றவும். இப்போது உணவின் தீஞ்ச வாசனை மறைந்து போகும்.
கிரீம் பொருட்கள் பயன்படுத்தவும்:
உணவு கருகி இருந்தால், கிரீம், வெண்ணெய், பால் அல்லது தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கலாம். இந்த பொருட்கள் கறி மற்றும் குழம்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சாஸ்களைச் சேர்க்கவும்:
நீங்கள் சமைத்த உணவை கருகி போய் இருக்கும் போது, சுவையை சமநிலைப்படுத்த சாஸ்களைச் சேர்க்கவும். ஏனெனில், சாஸ்களின் இனிப்பு மற்றும் கார சுவை கருகிய வாசனையை சமன் செய்ய உதவும்.