இன்றைய வாழ்க்கை முறையும், தவறான உணவு பழக்கவழக்கமும் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. பியூரின் எனப்படும் புரதங்களின் அதிகப்படியான காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, உட்காருவதில் சிரமம், விரல்களில் வீக்கம் என பல வகையான பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அசைவம் மற்றும் புரதம் உள்ளது. குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் யூரிக் அமிலம் கணிசமாக அதிகரிக்கும். இது தவிர கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.
யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் சிவப்பு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை முற்றிலுமாக விலக்கி வைகக் வேண்டும். அதிக புரத உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் உடல் செயல்பாடுகளைச் செய்வதும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
நீரேற்றமாக இருக்க அதிக தண்ணீர் குடிக்கவும். யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், உங்கள் உணவு முறையில், வாழ்கை முறையில் மாற்றத்தை கொண்டு வரவும்.