இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் எடையினை குறைப்பது என்பது இந்த தலைமுறையினருக்கு மிகுந்த சவாலாக உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்தப் பலனையும் தராது. உடல் எடை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம்.
தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதில் சிறிதளவு புதினா, வெல்லம், 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து மீண்டும் ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் தண்ணீரை வடிகட்டி அதை தினமும் பருகி வந்தால் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்.
எனவே, வெல்லம் மற்றும் எலுமிச்சை நீரின் கலவையானது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். தண்ணீரில் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடனே குறைக்கிறது. இதனால் உடல் எடை குறையும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது.