Eggs and banana: வாழைப்பழத்துடன் முட்டை சேர்த்து சாப்பிடலாமா.? மீறி சாப்பிட்டால் என்ன பிரச்சனை தெரியுமா..?

Published : Oct 15, 2022, 10:12 AM ISTUpdated : Oct 15, 2022, 10:16 AM IST

Eggs and banana together eating: முட்டையுடன்  வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும். மேலும் எந்தெந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்பதையும் பார்ப்போம்.

PREV
16
Eggs and banana: வாழைப்பழத்துடன் முட்டை சேர்த்து சாப்பிடலாமா.? மீறி சாப்பிட்டால் என்ன பிரச்சனை தெரியுமா..?

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் கடைபிடிக்க வேண்டியவை. அதில், வாழைப்பழம், முட்டை போன்றவை குழந்தைகள் முதல் அனைவரும் உண்ணக் கூடியவை. இவ்விரண்டிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

26

எனினும், சத்துக்கள் நிறைந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை ஆகும். அப்படி முட்டையுடன்  வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் என்ன பிரச்சனை, மேலும் எந்தெந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?

36

முட்டையில் இருக்கும் பாஸ்பரஸ், வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்துகள் உடலின் கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி நம்மை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. ஆரோக்கியமான வாழ்விற்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையுடன் வேறு சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது. 

மேலும் படிக்க...Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?
 

46

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில், வைட்டமின் C மற்றும் B6, கொழுப்பு, நார் சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆனால், முட்டையுடன், வாழைப்பழத்தை ஒன்றாக எடுத்து கொள்வது என்பது முற்றிலும் தவறு. ஏனெனில், இந்த இரண்டு உணவுகளும் கலோரி அதிகமான உணவு என்பதால் உங்கள் சீரண மண்டலம் இதை சீரணிக்க மிகவும் சிரமப்படும். இது வயிறு தொடர்பான, மலசிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

56

முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாதவை:

மேலும், முட்டையுடன், பன்னீர் சேர்த்து சாப்பிடுவது வயிறு தொடர்பான மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

முட்டையுடன், மீன் சேர்த்து சாப்பிடுவது தோல் வெடிப்பு, அலர்ஜியை உண்டாக்கி ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும்.

முட்டையில் உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டும் சேரும் போது, எதிர்வினை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டாம்.

 

 

66

முட்டையுடன் சேர்த்து சாப்பிட வேண்டியவை:

முட்டையுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையைச் சேர்த்துச் சாப்பிடுவது தேவையற்ற கரிகளைக் குறைப்பதுடன் அதிக அளவு  ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்கும்.

மேலும், கீரைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?

Read more Photos on
click me!

Recommended Stories