தீபாவளிக்கு ரவையை வைத்து குலாப் ஜாமுன் ரெசிபி, இப்படி செய்து அசத்துங்கள்! கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம்!

First Published Oct 20, 2022, 11:00 AM IST

How to make gulab jamun in Tamil: நம் வீட்டில் இருக்கும் இந்த ரவையை மட்டும் வைத்தே ஒரு சூப்பராக குலாப் ஜாமுன் செய்து அசத்தலாம். இந்த, ரவை குலோப் ஜாம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தீபாவளி நாட்கள் துவங்கிவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், ஷாப்பிங் என ஒரு வாரம் முழுவதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. கூடவே இந்த நாட்களில் ஒரு வாரம் முழுவதும் விதமான பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும்அதில், குலோப் ஜாமுனும் நிச்சம் இடம்பெற்றிருக்கும். இப்போதெல்லாம், வீட்டில் விசேஷம் என்றாலும், தீபாவளி பண்டிகையின் போதும் குலோப் ஜாமுனை அதிக அளவில் செய்கிறார்கள்.

எப்போதும் கடைகளில் வாங்கி செய்யும், குலோப் ஜாமுனுன் இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல்,  நம் வீட்டில் இருக்கும் இந்த ரவையை மட்டும் வைத்தே ஒரு சூப்பராக குலாப் ஜாமுன் செய்து அசத்தலாம். இந்த, ரவை குலோப் ஜாம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: 

ரவை -1 டம்ளர்

பால் -3 டம்ளர்

நெய் – 2  டீஸ்புன் 

குங்குமப்பூ – 1 பின்ச்

எண்ணெய் – 200 கிராம்

சர்க்கரை -2 டம்ளர்

தண்ணீர் -2 டம்ளர்

ஏலக்காய் – 1 பின்ச்

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதில் ரவையை நெய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். ரவையின் நிறம் மாறக்கூடாது. வாசம் வரும் வரை வறுத்தாலே போதும். 

பிறகு வறுத்தெடுத்த ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் குலோப் ஜாமுன் பதம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க..இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட ஆரோக்கியமாக கீரை வடை ரெசிபி..! இப்படி ஒருமுறை செய்து அசத்துங்கள்..!


இப்போது, பேனை வைத்து வறுத்த அரைத்த ரவையை அதில் சேர்த்து ஒரு டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள் பாலும் ரவையும் சேர்த்து, பேனில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் வரும் வரை கிண்டி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.  

பிறகு, மிதமான சூட்டில் இருக்கும் போதே அந்த ரவையும் பாலும் சேர்ந்து அந்த மாவை உருண்டை பிடித்து, வைத்து கொள்ளுங்கள்.

 
இப்போது இன்னொரு பேனில், சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். ஒரு இரண்டு டம்ளர் சர்க்கரைக்கு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடுங்கள். இதில் ஒரு பின்ச் ஏலக்காயும் ஒரு பின்ச் குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

சர்க்கரை எல்லாம் கரைந்து அதில் பபுள்ஸ் வரும் வரை வைத்திருந்து, பின் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு பாகை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் பாகு கெட்டி படாது. அது மட்டும் இன்றி குலோப் ஜாமுன் மீது சர்க்கரை படிந்து நற நறவென்று இருக்காது.

மேலும் படிக்க..இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட ஆரோக்கியமாக கீரை வடை ரெசிபி..! இப்படி ஒருமுறை செய்து அசத்துங்கள்..!

click me!