செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து முளை கட்டிய ராகி மாவை அந்த கடாயில் போட்டு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த இந்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.