முதன்முதலாக டேட்டிங் போகப் போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க..!!

First Published Oct 26, 2022, 8:00 AM IST

உங்களுடைய முதல் டேட்டிங் நல்ல சமிக்ஞையுடன் தான் நிறைவடைந்தது என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

முதன்முதலாக நடக்கும் டேட்டிங் நிச்சயமாக விசித்திரமான சில மன உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக தான் இருக்கும். ஒரு படபடப்பு, பதற்றம் என அதுவரை கண்டிராத மனநிலைகள் தோன்றும். டேட்டிங்கில் இருக்கும் போது தனிமையாகவே இருப்பது போன்று கூட தோன்றலாம். டேட்டிங் நன்றாக துவங்கி, நல்லமுறையில் முடியுமா என்கிற கேள்வி மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். எனினும், உங்களுடைய முதல் டேட்டிங் நல்ல சமிக்ஞையுடன் தான் நிறைவடைந்தது என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

நேரம் தவறாமை

முதல் டேட்டிங் அன்று காலதாமதமாக வருவது என்பது பெரும் தவறாகும். ஒருவேளை அந்த சந்திப்பு காதலில் துவங்கி, திருமணத்தில் முடிந்தால் வாழ்நாள் முழுக்க சொல்லிக்காட்டப்படும். அதனால் எப்போதும் முதல் டேட்டிங்கின் போது காலதாமதம் செய்யாமல் நேரத்துக்கு சென்றுவிடுங்கள். ஒருவேளை சூழல் மற்றும் சந்தர்ப்பம் காரணமாக காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக அழைத்து காரணத்தைச் சொல்லிவிடுங்கள். ஆனால் முதல் டேட்டிங் அன்று நபரை சந்திக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.
 

ஏற்ற உடை போதும்

அந்த இடத்துக்கும் உங்களுக்கும் பொருந்தக்கூடிய ஆடையாக இருப்பதே  போதுமானது. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ’ஓவர் டூ’ செய்துவிடாதீர்கள். ஆண்கள் பெரும்பாலும் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் முடிந்தால் ஒரு ஸ்வெட் ஷர்ட் அணிந்து கூலாக செல்வது பொருத்தமாக இருக்கும். பெண்களும் சவுரியமாக இருக்கும் ஆடை அணிந்தால் போதுமானது. முதல் பார்வையிலே இம்ப்ரஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்து, ஏதாவது சொதப்பிவிட்டால், டேட்டிங் தோல்வி அடைந்த பழி ஆடை மீது வந்து சேரும்.

சந்திப்பு நடக்குமிடம்

ஆடை நம்முடைய பெருமாற்றத்தை கடந்து, அந்த டேட்டிங்கை சிறப்புள்ளதாக மாற்றுவது சந்திப்பு நடக்கும் இடம் தான். அதிக கூச்சல், மக்கள் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் மனம்விட்டு நிறைய பேசலாம். ஒருவரை குறித்து ஒருவர் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். முதல் டேட்டிங் நடக்கும் இடம் காலத்துக்கும் மறக்காது. அந்த இடத்தை காலந்தோறும் சொல்லி சொல்லி நினைவு கூற வேண்டும். அதனால் எப்போதும் உங்களுடைய டேட்டிங்கான இடத்தை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

எண்ணற்ற மருத்துவப் பலன்களை வழங்கும் இஞ்சி, புதினா, தேன், நெல்லிக்காய்... இன்னும் பல..!!

முகமன் கூறுவது நல்லது

உங்களுடைய டேட்டை நீங்கள் சந்திக்கும் போது, அவருக்கு சில வாழ்த்துரைகளை வழங்கலாம். ”ஆடை நன்றாக உள்ளது”, “போட்டோவில் பார்ப்பதை விடவும் நேரில் நன்றாக இருக்கீறிகள்”, ”நல்ல இடத்தை தேர்வு செய்துள்ளீர்கள்” போன்ற வார்த்தைகளால் பாராட்டலாம். ஒருவேளை முதல் சந்திப்பிலேயே நீங்கள் சந்திக்கும் நபரின் குணம் தெரியவந்தால், அதை குறிப்பிட்டும் பாராட்டுக்களை கூறலாம். உரையாடலின் போது அவருடைய கலை ரசனை, விருப்பங்கள் குறித்து பேசினால், அதையும் பாராட்ட மறந்துவிடாதீர்கள். 

இந்த 5 உறுப்புகள் சரியாக இயங்கினால் தான் தாம்பத்யம் சிறக்கும்..!!

உரையாடலை தொடருங்கள்

முதல் டேட்டிங் செல்லும் அன்பர்கள் செய்யும் பெரும் தவறு என்னவென்றால், எந்தவித முன் தயாரிப்புமில்லாமல் செல்வது தான். இதனால் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் திடீர் திடீரென்று இடையில் பேச்சை நிறுத்துவிடுவார்கள். இப்படி செய்யவே கூடாது, முடிந்தவரையில் உங்களை தொடர வேண்டும். முதல் சந்திப்பு என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருக்கும். அதைப்போக்குவதற்கு நீங்கள் பேசியே தீர வேண்டும். அதற்காக ஏதாவது உளர வேண்டும் என்பது இல்லை. இருவரும் மவுனமாக இருந்துவிடக்கூடாது அவ்வளவுதான். 

click me!