ஆண்களே..! இரவில் உங்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் அந்த சீக்ரெட் என்ன தெரியுமா..? படிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

First Published | Oct 23, 2022, 1:15 PM IST


Relationship Tips: நிஜமாகவே ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கும் விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களே, அவை என்ன என்பதை படித்து மாற்றிக் கொள்வோம் வாருங்கள்.

பெரும்பாலும், பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயத்தை ஆண்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை.ஏனென்றால், பெண்களின் மனது கடலை விட ஆழம், அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு செல்வார்கள். ஆனால், நீங்கள் நினைப்பது தவறு உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆண்களிடம் விரும்பும் அந்த இரண்டு விஷயங்கள், உங்களின் அன்பும், அரவணைப்பும் தான். 

மேலும் படிக்க ...Relationship Tips: உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரிந்து விட்டால்..உடனே என்ன செய்யணும், என்ன செய்ய கூடாது?

ஆனால், இதை ஆண்கள் யாரும் புரிந்துகொள்வதில்லை, சில சமயம் இதை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை  சீரழிக்கும் ஆண்களும் இருக்கின்றனர். இது போல உண்மையாகவே ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கும் விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம். 


முதலில், ஆண்கள் பலரும் தன்னிடன் வசீகரமான தோற்றம் இருந்தால் மட்டும் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று  நினைக்கின்றனர். ஆனால், ஆண்களை பெண்கள் தன்னுடைய வாழ்கை துணையாக ஏற்று கொள்வதற்கு ஒரு பெண் எதிர்பார்ப்பது வசீகர தோற்றம் கிடையாது. அவனது ஒட்டுமொத்த காதலை தான். குறிப்பாக, தங்களை புரிந்துகொண்டு சிரிக்க வைக்கும் ஆண்களை தான் பெண்கள் பலரும் விரும்புகின்றனர்.

பணம் மட்டும் போதுமா..?

பணம் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுந்து விடுகிறார்கள் என்ற தவறான கருத்து நம்முடைய சமூகத்தில் உள்ளது. ஆனால், உண்மையில் பெண்கள் தங்களது சொந்த காலில் நின்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.  ஆண்களை யாரும் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. மாறாக தன்னுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புகிறார்கள். 

அறிவுசார்ந்த திறமை சாலிகளை விரும்புகிறார்கள்:

பெண்கள் நல்ல அனுபவம் வாய்ந்த அறிவுசார்ந்த திறமை சாலிகளை விரும்புகிறார்கள். அழகையும், பணத்தையும் வைத்து மட்டும் தங்கள் வாழ்கை துணையை பெண்கள் தேர்ந்தெடுப்பது கிடையாதாம். தன்னை வழி நடத்தி செல்லும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் தங்கள் கணவர்கள் படுக்கையில் சிறப்பாக செயல்படுவதை விரும்புகிறார்கள். அவர்களுக்கு பாலியல் உறவுக்கு முன் விளையாட்டு அதிகம் தேவை. ஆனால், ஆண்கள் பெண்களின் அறிவுசார்ந்த செயல்களை கண்டு கொள்வதில்லை.

அதேபோன்று, எல்லா பெண்களும் இல்லற வாழ்கை அமைந்து கொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. பெரும்பாலான பெண்கள் இல்லற உறவை துவங்குவதற்கு முன்பு சரியான நேரம், அர்ப்பணிப்பு, சரியான மனநிலை போன்றவற்றை பெற விரும்புகின்றனர் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ...Relationship Tips: உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரிந்து விட்டால்..உடனே என்ன செய்யணும், என்ன செய்ய கூடாது?

Latest Videos

click me!