பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நம்முடைய உற்ற நண்பர்களிடத்தில் பலமுறை பேசுவதுண்டு. ஆனால் செக்ஸ் வாழ்க்கையை குறித்து நாம் யாரிடமும் வாயையே திறக்க மாட்டோம். இதற்கு காரணம், அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நட்புறவு சாதாரணமாக இருக்குமா என்பது தான் பலருடைய சந்தேகமாக உள்ளது. உண்மையில் நமக்கு பாலியல் ரீதியாகவும் செக்ஸ் தொடர்பாகவும் ஏற்படும் சந்தேகங்கள் அல்லது கேள்விகளை நண்பர்களை தவிர, வேறு யாருடனும் பேச முடியாது. உங்களுக்கு பேசக்கூடிய நபர் வேறுயாரும் இல்லையென்றால், பாலியல் தொடர்பான உங்களுடைய சிக்கல்களை மனம் விட்டு நண்பரிடத்தில் பேசுங்கள். உடலுறவைப் பற்றி வெளிப்படையாக பேசும்போது, உங்களுக்குள்ளும் பல புரிதல்களை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் மீது தவறு இருந்தால் அதையும் புரியவைக்கும்.
உரையாடல் நல்லதுங்க
பாலியல் உணர்வு மற்றும் அதிலுள்ள சிக்கல்கள் குறித்த உரையாடல் மனித குலத்துக்கு மிகவும் நல்லது செய்வதாகும். அப்போது தான் ஒருவருடைய பாலியல் ஆசைகள், விருப்பத் தேர்வுகள், அனுபவங்கள், சிக்கல்கள் போன்ற விஷயங்கள் வெளிப்படும். ஆனால் எங்கே இதெல்லாம் வெளியே தெரிந்தால், மானம் போய்விடுமோ என்று பலரும் வெட்கப்பட மட்டுமே செய்கிறோம். இதுகுறித்து பேசுவது என்பது பொதுவாக நடக்கூடியது தான். இதனால் நமது உறவுகளில் கவனிப்படாத கவலைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விடுகிறது.
புரிதல் விசாலமடைகிறது
பாலியல் உணர்வு மீதான உரையாடல், பாலியல் பற்றிய பல்வேறு கருத்துக்களைக் கேட்க உங்களை அனுமதிக்கிறது. அதுவும் உங்கள் சொந்த செக்ஸ் வாழ்க்கைக்கான கதவுகளை திறக்க பெரிதும் உதவ வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் படுக்கையறைக்கு அப்பால் இருக்கும் உலகத்தை நீங்கள் எப்படி புரிந்துவைத்துள்ளீர்கள் என்பதை, இந்த உரையாடல் உங்களுக்குள் ஏற்படுத்தும். இதன்மூலம் பாலியல் உணர்வு சார்ந்த உங்களுடைய கண்ணோடம் பர்ந்தநிலையை அடையும்.
நட்ப்புக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது
2022 இல் கூட பாலியல் பற்றி பேசுவது தனிமையை ஏற்படுத்திவிடக்கூடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். உரையாடல்கள் நன்றாக நடக்கும் போது, நண்பர்களுடன் உடலுறவு பற்றி விவாதிப்பது ஆரோக்கியமான ஒன்று தான். சூரியனுக்குக் கீழே இருக்கும் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு யாரும் இல்லையென்றால், அது உங்களை ஆன்லனை நோக்கி தள்ளும். அது புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு பெரிய பிரச்னையில்லை. ஆனால் நடுத்தர வயதை கடந்துவிட்டவர்கள் ஆன்லைனை நாடுவது வேறுசில பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் நண்பருடன் மனதார பாலியல் சிக்கல்களை பற்றி பேசுவது, நட்பை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
முதலில் ஒப்புதல் பெறுங்கள்
இந்த உரையாடல்களில் மூழ்குவதற்கு முன், உங்கள் நண்பர்களிடமிருந்து ஒப்புதல் வாங்குங்கள். உங்கள் நண்பரிடம், “செக்ஸ் பற்றி பேசினால் பரவாயில்லையா?” என்று கேளுங்கள்.ஆழ்ந்த உரையாடல்களை நடத்துவதற்கு முன் கேட்க வேண்டிய மற்றொரு பயனுள்ள கேள்வி என்னவென்றால், "என்னுடன் ஒரு கடினமான தலைப்பைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு விருப்பம் உள்ளதா? என்பதையும் கேளுங்கள். இது உங்கள் மீது உங்களுடைய நண்பருக்கு மரியாதையை அதிகரிக்குமே தவிர, எந்தவிதத்திலும் குறைத்திடாது.
உரையாடலுக்கு பிறகு செய்ய வேண்டியவை
உங்களுடைய உரையாடல் முடிந்தவுடன், அது எப்படி இருந்தது? என்பதை தயவு செய்து உங்கள் நண்பரிடம் கேளுங்கள். அதுகுறித்து அவருடைய கருத்தை பெற முயலுங்கள். அப்போதுதான் அடுத்த முறை பிரச்னை ஏற்படும் போது, நீங்கள் அவருடன் பேச முடியும். அதேபோன்று தனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் அவரும் உங்களிடம் வந்து பேசுவார். இது நட்ப்புக்குள்ளான உறவை மேலும் நெருக்கமாகும். மேலும் ஒருவர் மீதான நம்பிக்கையையும் மரியாதையையும் அதிகரிக்கும்.