விந்து என்பது தடிமனான ஜெல்லி போன்றது. இது பாலியல் செயல்பாடுகளின் போது ஆண் பிறப்புறுப்பில் இருந்து வெளியாகும். பொதுவாக அதன் நிறம் வெள்ளை ஆகும். இது மனிதனின் நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். ஆனால் சில உடல்நலப் பிரச்சனைகளால் ஆண்களின் விந்தணுவின் நிறமும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம்...
தொற்று: சில நேரங்களில் ஆண்களின் விந்தணுவின் நிறம் சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக மஞ்சள் நிறமாக மாறும். இது புரோஸ்டேட் சுரப்பியில் பாக்டீரியா நுழைவதால் ஏற்படும் புரோஸ்டேடிடிஸ் எனப்படும் யுடிஐக்கு வழிவகுக்கிறது.
பியோஸ்பெர்மியா: ஆண்களில், வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக, விந்தணு எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் அதன் நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இப்படி செய்ய மறக்காதீங்க: உடலில் ஏதேனும் விசித்திரமான மாற்றங்கள் ஏற்பட்டால், சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரை அணுகவும். மேலும், காரணம் தொற்று அல்லது STD என்றால், அதை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.