Heart Health : காலைல அலாரம் வைப்பது 'இதயத்துக்கு' டேஞ்சராம்! பலர் அறியாத தகவல்; நிபுணர் போட்டுடைத்த உண்மை

Published : Sep 22, 2025, 09:12 AM ISTUpdated : Sep 22, 2025, 09:26 AM IST

காலை அலாரம் ஒலிப்பது இதயத்திற்கு ஆபத்தாகும் என நிபுணர்கள் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
17

மனிதனின் உயிரியல் கடிகாரம் (சர்க்காடியன் ரிதம்) அவனை குறிபிட்ட நேரத்தில் தூங்கி, எழும் வகையில்தான் இயங்குகிறது. அதாவது சேவல் எப்படி அதிகாலையில் கூவுகிறதோ அதைப் போல மனிதனும் குறிப்பிட்ட நேரத்திற்கு தினமும் காலை எழுந்தால், ஒவ்வொரு நாளும் அதே நேரத்திற்கு விழிப்பான். ஆனால் இங்கு தூங்குவது ஒரு நேரம், எழுவது ஒரு நேரம் என்பதால் பலருக்கும் அலாரம் தேவைப்படுகிறது. ஆனால் அலாரம் வைப்பது கூட மனித உடலுக்கு ஆபத்தில் வந்து முடிகிறது. ஏன் நிபுணர்கள் காலை அலாரம் வைப்பது ஆபத்தானது எனச் சொல்கிறார்கள் என இந்தப் பதிவில் காணலாம்.

27

காலை அலாரம் பள்ளி, வேலை அல்லது பயணம் என பல விஷயங்களை சரியான நேரத்தில் செய்ய உதவுகின்றன. ஆனால் நிபுணர்கள் வழக்கமாக அலாரம் வைத்து எழுவது மூளைக்கும், இதயத்திற்கும் அழுத்தத்தைக் கொடுக்கலாம் என எச்சரிக்கின்றனர். எந்த அவசரமும் இல்லாமல் மெதுவாக ஒருவரை எழுப்புவது பிரச்சனை இல்லை. ஆனால் அலாரம் மனிதனின் உயிரியல் செயல்முறையை சீர்குலைத்துவிடுகிறது. உடலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து வழுக்கட்டாயமாக வெளியே இழுத்துக் கொண்டு வருகிறது. இப்படி உடலில் ஒரு திடீர் அதிர்ச்சி ஏற்படுவது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் சுரப்பை அதிகரிக்கிறது.

37

பொதுவாக கார்டிசோல் காலை எழும்போது மெல்ல உயர்ந்து உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஆனால் அலாரம் அடிப்பதால் காலை பொழுதில், வேகமாக மன அழுத்தத்தை தூண்டுகிறது. இப்படி திடீரென கார்டிசோல் அதிகம் சுரப்பதால், கார்டியோவாஸ்குலார் அமைப்பில் பிரச்சனைகள் வருகின்றன. அதாவது இத பிரச்சனைகள் ஏற்படுவதால நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

47

நல்ல தூக்கத்தில் இருந்து திடீரென திடுக்கிட்டு விழிப்பதால் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு இரண்டும் சில நொடிகளில் வேகமாக அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்னரே இதயப் பிரச்சனைகள் இருக்கும் நபருக்கு, இது மோசமான விளைவுகளை உண்டாக்கலாம். ஆரோக்கியமான நபருக்கும் தொடர்ந்து இப்படி நிகழ்வது உடல்நலத்தில் மோசமான மாற்றத்தைத் தரலாம்.

57

அலாரம் இதயத்திற்கு அழுத்தத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி மூளையையும் சேர்த்து குழப்புகின்றன. இதனால் தூக்க செயலற்ற தன்மை ஏற்படும். இது மூளையை ஒருவித மந்தநிலையில் விட்டுவிடுகிறது. பல மணிநேரம் தூங்கினாலும் ஓய்வெடுத்த மாதிரி இருக்காது. காலை எழுந்த பின் சோர்வாகவும் மந்தமாகவும் உணரவைக்கும். இதற்கு அலாரம் தான் காரணம். இதை சரிசெய்யாமல்விட்டால் நாள்பட்ட தூக்க செயலற்ற தன்மை ஏற்படும். மனநிலை, உற்பத்தித்திறன், அறிவாற்றல் செயல்திறன் அனைத்தும் பாதிக்கப்படும்.

67

எந்த அலாரமும் வைக்காமல் இயற்கையாகவே குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது உடலுக்கு நல்ல ஓய்வை அளிக்கும். உடலின் சர்க்காடியன் ரிதம் சரியாக செயல்படும். இயல்பாக தூங்கி எழுவது இதயத்திற்கு எவ்வித அழுத்தத்தையும் அளிப்பதில்லை. காலையில் எழும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதில்லை. இதனால் நாள் முழுக்க புத்துணர்வாகவும் மேம்பட்ட மனநிலையுடன் காணப்படுவீர்கள்.

77

எல்லோருக்கும் அலாரம் இல்லாமல் எழுந்திருப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றும் போது அதை சாத்தியமாக்க முடியும். உங்களால் அலாரம் வைப்பதை தவிர்க்க முடியாவிட்டால் மிதமான ஓசை எழுப்பும் அலாரங்களை வைப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories