நம்முடைய உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதற்கு பெரிதும் உதவியாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். வயது கூட கூட எலும்புகள் ஆரோக்கியம் குறையும். எனவே இளம் வயதிலேயே எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 எளிய பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றி வந்தாலே போதும். அவை எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கவும் உதவும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
27
1. தினமும் கால்சியம் எடுத்துக் கொள்ளுங்கள் :
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பனீர் போன்ற உணவுகளை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எலும்புகளை வலுவாக வைக்க உதவும்.
37
2. மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகள் :
விதைகள், கொட்டைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கும், எலும்பு அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
3. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும் ;
இந்த இரண்டு பழக்கங்களும் எலும்பு ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தும். எனவே வலுவான ஆரோக்கியமான எலும்புகள் பெற விரும்பினால் இந்த இரண்டு பழக்கங்களையும் இன்றிலிருந்து கை விடுங்கள்.
57
4. சர்க்கரை பானங்கள் :
குளிர்பானங்கள் எலும்புகளிலிருந்து கால்சியத்தை வெளியேற்றும். எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்பினால் அவற்றை குடிப்பதற்கு பதிலாக தேங்காய் நீர், மோர், எலுமிச்சை சாறு போன்ற ஆரோக்கியமான பானங்களை குடியுங்கள்.
67
5. வைட்டமின் டி :
வைட்டமின் டி பெற தினமும் அதிகாலை சூரிய ஒளியில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் செலவிடுங்கள். இது தவிர கால்சியம் உறிஞ்சுதலை ஆதரிக்க முட்டை, காளான் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.
77
6. உடற்பயிற்சிகள் :
வாக்கிங், ஜாக்கிங் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். அவை எலும்பு வலிமையை ஆதரிக்கும் மற்றும் எலும்பு பலவீனமாகுதலை தடுக்கும்.