Weight Loss : ஆப்பிள் vs வாழைப்பழம் : எடையை குறைக்க எந்த பழம் சாப்பிடனும்?

Published : Sep 19, 2025, 12:12 PM IST

வாழைப்பழம் அல்லது ஆப்பிள் இந்த இரண்டில் எது எடை இழப்புக்கு அதிக நன்மை பயக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
Banana or Apple For Weight Loss

உடல் எடையை இயற்கையான வழியில் குறைப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. இதில் சில பழங்களும் காய்கறிகளும் நமக்கு உதவுகிறது. அந்தவகையில், உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய பழங்களில் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் அடங்கும். எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பலர் உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது அதற்கு முன்னதாக இந்த பழங்களை சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை இரண்டில் எது எடை இழப்புக்கு சிறந்தது என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த பதிவில் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.

24
வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :

- வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

- வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அது செரிமானத்தை தாமதப்படுத்தி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்க உதவுகிறது.

- வாழைப்பழத்தில் நல்ல கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி, ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது.

34
ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள் :

- ஆப்பிள் கலோரிகள் குறைவாகவும், பெக்டின் போன்ற நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் அவை பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறை நிரம்பி வைத்திருக்கும் உணர்வை தருகிறது.

- ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

- ஆப்பிளில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் பண்புகள் உள்ளதால் அவை எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.

44
எடை இழப்புக்கு எது சிறந்தது?

எடை இழப்புக்கு வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் இவை இரண்டும் நன்மை பயக்கும் என்றாலும், ஆப்பிளில் சற்று அதிக நன்மை பயக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் அதில் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்தை கொண்டு உள்ளதால் எடை இழப்பிற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அது ஆரோக்கியமான செரிமானத்திற்கு பங்களிக்கின்றது.

Read more Photos on
click me!

Recommended Stories