குடலில் இரத்தப்போக்கு என்பது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் ஏற்படுவதில்லை. (விபத்து மூலம் குடலில் காயம் ஏற்படாத வரை). இதுபோன்ற GERD பிரச்சனை குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளாக ரோபோ சங்கருக்கு இருந்திருக்க வேண்டும்.
இந்த பிரச்சனையை மருந்தை விட உணவு முறையை மாற்றிக் கொண்டாலே ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்க முடியும். குறிப்பாக, மது அருந்துதல், மசாலா கூடிய மாமிசம், காரசாரமான உணவுகள் தான் GERD பிரச்சனைக்கு முதல் எதிரி.
இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு தெரியும் முதல் அறிகுறிகள்: வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தொடர்ச்சியாக தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை தீவிரமாகும். இதன் இறுதி கட்டம் தான் Gastrointestinal Bleeding. இந்த இரத்தப்போக்கு கூட முதல் முறையாக வந்து, அதனை கவனித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உணவு முறைகளை மாற்றியிருந்தால் கூட, ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால், சிலர் இரத்தப்போக்கு (வாந்தி அல்லது கழிவு வழியாக) வருவது தெரிந்த பின்னர் கூட அந்த மோசமான உணவு முறையை தொடர்வார்கள். இது வயிற்றுக்கு Massive Gastrointestinal Bleeding-ஐ ஏற்படுத்தி விடும்.