கர்ப்பகால சர்க்கரை நோய்: கட்டுப்படுத்த இதையெல்லாம் செய்ங்க!!

Published : Jan 31, 2025, 12:45 PM ISTUpdated : Jan 31, 2025, 12:51 PM IST

Lower Blood Sugar During Pregnancy : கர்ப்ப காலத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
15
கர்ப்பகால சர்க்கரை நோய்: கட்டுப்படுத்த இதையெல்லாம் செய்ங்க!!
கர்ப்பகால சர்க்கரை நோய்: கட்டுப்படுத்த இதையெல்லாம் செய்ங்க!!

கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் இது கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகின்றது இந்த அதிகரித்த ரத்த சர்க்கரை அளவானது குழந்தை பிறந்த பிறகு போய்விடும் என்றாலும், சில சமயம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அது குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பல பெண்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.

25
கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எப்படி?

இதற்கு கர்ப்ப காலத்தில் உணவு பழக்கம் மற்றும் எடை குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல வகையான மாற்றங்கள் ஏற்படும். இதனால் பல பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கணிச்சமாக அதிகரிக்கும். சில சமயங்களில் இந்த நோய் காரணமாக குறைபிரசவ குழந்தை அல்லது கருசிதைவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவை குறித்து மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பின்பற்றுவதன் மூலம் கர்ப்ப கால சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். இப்போது அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகள் மருதாணி வைத்தால் கெட்டது நடக்குமா? சாஸ்திரம் சொல்வது இதுதான்!!

35
கர்ப்பகால சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள் இங்கே:

தண்ணீர்:

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க, நீங்கள் நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் அவசியம். எனவே ஒரு நாளைக்கு சுமார் ஏழு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்:

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்பவது பொதுவானது. ஆனால் அவை அதிகரித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதட்டம், கவலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் தினமும் தியானம் யோகா செய்யுங்கள்.\

இதையும் படிங்க:  தாய்ப்பால் அதிகரிக்க பிரசவத்திற்கு பின் பிரெட் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?

45
ஆரோக்கியமான கொழுப்புகள்:

கர்ப்பகால நீரிழிவு நோயை தவிர்க்க கர்ப்பிணி பெண்கள் தங்களது உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகம் சேர்க்க வேண்டும். இதற்கு நீங்கள் நட்ஸ்கள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள்:

கர்ப்பிணி பெண்கள் நாச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஏனெனில் அதிக நார் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை குறைக்கும்.

நல்ல தூக்கம் அவசியம்:

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் கட்டுப்படுத்த கர்ப்பிணி பெண்கள் சுமார் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.

55
நினைவில் கொள்:

- அதிக சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி சர்க்கரை உணவுகள் உடல்  எடை அதிகரிப்பதற்கு வழிவகிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒருபோதும் சர்க்கரை உணவுகளை சாப்பிட வேண்டாம்.

- கர்ப்ப காலத்தில் குளிர்பானங்கள் அருந்துவது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. கர்ப்ப காலத்தில் கூல்ட்ரிங்ஸ் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகாது. எனவே கர்ப்பிணி பெண்கள் இவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

- கர்ப்ப காலத்தில் வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்ய வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories