உடல் எடை மளமளவென குறைய.. முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க!!

Published : Jan 31, 2025, 09:39 AM IST

Radish for Weight Loss : உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையா? முள்ளங்கி நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும். 

PREV
15
உடல் எடை மளமளவென குறைய.. முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க!!
உடல் எடை மளமளவென குறைய.. முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க!!

தற்போது உடல் எடை பருமன் மக்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் எடை இரண்டு வேகமாக அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த பருவத்தில் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடுகிறோம். இதன் காரணமாக கலோரி நுகர்வு குறைந்து, கலோரி உட்கொள்ளல் அதிகரிக்கும். இது கொழுப்பாக உடலில் படிந்து விடுகிறது. எனவே இதை தடுக்க குளிர்காலத்தில் உடல் செயல்பாட்டை அதிகரிக்கவும் மற்றும் சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், குளிர்காலத்தில் எடையை குறைப்பதற்கு சில காய்கறிகளை சாப்பிடு வேண்டும். அவற்றில் ஒன்றுதான் முள்ளங்கி.

25
முள்ளங்கியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

முள்ளங்கியில் கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனிசு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் பி2, வைட்டமின் ஏ போன்றவை உள்ளன.

35
எடையை குறைக்க முள்ளங்கி எப்படி சாப்பிட வேண்டும்?

முள்ளங்கியில் கலோரிகள் குறைந்த அளவு மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிடுவதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். இதற்கு நீங்கள் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம் இதனால் உடலுக்கு தேவையான முழு ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும். செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும், எடையும் குறையும். இது தவிர, உள்ள அழுக்குகளை அகற்றவும், வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கவும் முள்ளங்கியை ஜூஸாக போட்டு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது உங்கள் எடையை எளிதில் குறைக்க உதவும். 

இதையும் படிங்க:  இந்த '5' பிரச்சினை உள்ளவர்கள் முள்ளங்கியை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாதாம்! ஏன் தெரியுமா?

45
முள்ளங்கியின் பிற நன்மைகள்:

- முள்ளங்கிய தினமும் உங்களது உணவில் சேர்த்து வந்தால் செரிமான ஆரோக்கியமாக இருக்கும். இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, முள்ளங்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

-உடலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதற்கான இயற்கை முகவராக இது செயல்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் நச்சுக்களை வெளியேற்றும்.

இதையும் படிங்க: படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!

55
முள்ளங்கி நன்மைகள்

- பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முள்ளங்கிளில் நிறைந்துள்ளதால் இது பிபியை இயல்பாகுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

- முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் மற்றும் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். அதுபோல இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தை கணிச்சமாக குறைக்கும்.

- முள்ளங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்சனை குணமாகும். உடலில் இருந்து தேவையற்ற நீர் மற்றும் நச்சுக்களை அகற்ற உதவும் டையூரிடிக் பண்புகள் இதில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories