
நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களால் மன அழுத்தத்தை சந்திக்கிறோம். இதில் வேலை செய்யும் இடம் மட்டும் விதிவிலக்கா என்ன? உண்மை என்னவென்றால், இன்றைய நடைமுறை காலகட்டத்தில் வேலை இடத்தில் தான் நாம் அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறோம். வேலை செய்யும் இடம் நமக்கு பல வாய்ப்புகளின் வழங்கும் ஒரு பகுதியாகும். முக்கியமாக இது நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை தூண்டுகிறது. இருப்பினும் முன்னேற்றத்துடன் பல பொறுப்புகள் வருவதால் அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக தான் நாம் அடிக்கடி மன அழுத்தத்தை சந்திக்கிறோம். அதேசமயம் போதிய அளவு உடல் செயல்பாடுகள் ஏதும் செய்யாமல் இருப்பதால் நீண்ட காலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தம், சோர்வு, பதட்டம் ஏற்படாமல் இருக்க வேலை அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். இதற்கு சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். மேலும் உங்கள் வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
1. நன்றாக தூங்குங்கள்:
ஒரு நாளைக்கு சுமார் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஆனால் வேலை அழுத்தமாக இருக்கும்போது அல்லது நிறைய விஷயங்களை அது குறித்த விஷயங்களை யோசிக்கும் போது தூக்கம் எளிதாக வராது. எனவே, உங்களது மனம் அமைதி அடைவதற்கு இரவு நன்றாக தூங்குங்கள். இதற்கு நீங்கள் இரவு நேரத்தில் மொபைல் அதிகம் பார்ப்பது தவிர்க்க வேண்டும்.
2. ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள்:
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்களது உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். இதனால் உங்களது மனநிலை ஆரோக்கியமாக இருக்கும்.
உடற்பயிற்சி என்பது உங்களது மன ஆரோக்கியத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். முக்கியமாக நீங்கள் குறைந்தது 20 நிமிடம் நடைபயிற்சி போன்ற எளிமையான பயிற்சி செய்தால் உங்களது எண்டோர்பின்கள் உயர்த்தப்பட்டு, மன அழுத்தம், பதட்டம், கவலைகள் நீங்கும்.
4. தியானம் செய்யுங்கள்:
தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தவும், அழுத்தமான எண்ணங்களை தவிர்க்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி தியானம் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய மன அழுத்தம் இல்லாத வேலைகள்!
இந்த டிஜிட்டல் உலகில் 24 மணி நேரமும் அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் தான் அதிகரிக்கும். எனவே இதை தவிர்க்க உங்களுக்குகென ஒரு வரம்பை அமைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நேரத்தை கொடுக்கும். மேலும் அடுத்தநாள் உங்களை புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய தூண்டும்.
6. வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள்:
அலுவலகத்தில் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம், நண்பர்களிடம் அல்லது உங்களுக்கு பிடித்த இது குறித்து பேசுங்கள். இதனால் உங்களது மன அழுத்தம் குறையும்.
இதையும் படிங்க: நோய்களின் ஆபத்தை தடுக்கனுமா? மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் டிப்ஸ்!