வாக்கிங் தான் உங்க உடற்பயிற்சியா? அப்ப இந்த '4' விஷயங்களை கண்டிப்பா கவனிங்க!!
நீங்கள் நடைபயிற்சியை மட்டுமே உடற்பயிற்சியாக செய்பவராக இருந்தால் சில விஷயங்களை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும்.
நீங்கள் நடைபயிற்சியை மட்டுமே உடற்பயிற்சியாக செய்பவராக இருந்தால் சில விஷயங்களை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும்.
How To Fix Walking Mistakes : நமது உடல் இயக்கத்தின் முக்கியமான செயல் வடிவமே நடைபயிற்சியாகும். இதை சிலர் தங்கள் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சிக்கு சமமான ஒன்றாக செய்து வருகிறார்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக தினமும் நடைபயிற்சி செய்கின்றனர். வெகுநாட்கள் நடைபயிற்சி செய்தபோதிலும் குறிப்பிட்ட எடை குறைப்போ அல்லது நன்மைகளோ கிடைக்கவில்லை என புலம்புவோரும் உண்டு.
நீங்கள் தவறான தோரணையில் நடப்பது தான் அதற்கு காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் நடைபயிற்சி செய்யும்போது செய்யும் சில தவறுகள் தான் நாம் முழு பலன்களை பெறுவதில் இருந்து நம்மை தடுக்கிறது. இதனால் சில ஆரோக்கியப் பின்னடைவுகளும் ஏற்படலாம். இந்த பதிவில் நடைபயிற்சியை அன்றாட வாழ்வின் உடற்பயிற்சியாக செய்து வருபவர்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்து காணலாம்.
தோரணையில் கவனம் செலுத்தாமல் சரியற்ற நடைபயிற்சி வடிவம் கொண்டிருப்பதால் முதுகுவலி, மூட்டு வலி, போன்றவை ஏற்படும். நீண்ட நேரம் நடந்த பின்னர் கீழ் முதுகில் ஒருவிதமான இழுவை உணர்வு இருந்ததா? இப்படி வந்தால் இடுப்பு நெகிழ்வு தசைகள் அதிகம் பயன்படுவதாக அர்த்தம். இந்த தசைகள் இயல்பிலேயே இறுக்கமானவை. இவற்றை நடக்கும்போது அதிகம் இயக்கத்திற்கு உட்படுத்தக் கூடாது. மேல் முதுகு முதல் கன்று தசைகள் (calf muscles) வரை நன்கு இயங்க வேண்டும். பலர் நடக்கும்போது இடுப்பு தசைகளை ஈடுபடுத்திவிட்டு உடலின் மையப்பகுதி, வயிற்றுப்பகுதியின் இயக்கத்தை மறந்துவிடுகிறோம். இதனால் கீழ் உடலில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுத்துகிறது. உடலில் தசைகளை முழுமையாக ஈடுபடுத்துவதால் தோரணை மேம்படும். உடலில் , விறைப்பைத் தடுத்து எளிதாக நடக்கலாம்.
நடக்கும்போது கால்களை தட்டையாக வைக்குறீங்களா? கால்களை நகர்த்தும்போது தட்டையாக தரையில் கால்களை வைக்கக் கூடாது. இதனால் ஒவ்வொரு காலடியிலும் மூட்டுகள், அதிலும் முழங்கால்கள் மூலம் ஜார்ரிங் சக்தியை அனுப்பப்படுகிறது. இது தவறு. வலி ஏற்படும். தொடை எலும்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும். மாறாக குதிகால் தொடங்கி கால் வரை சம சக்தியுடன் நடப்பது நல்லது.
இதையும் படிங்க: காலைல வாக்கிங்கா? இந்த நேரத்துல போறதே பெஸ்ட்!! அற்புதமான '7' நன்மைகள்!!
நடக்கும் போது தரையை பார்த்தபடி நடப்பது, செல்போன் பார்த்தபடி நடப்பது போன்றவை மோசமான பழக்கமாகும். இதனால் உங்களுடைய தோரணை பாதிக்கப்படுகிறது. மேல்முதுகில் அதிகமான அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படக்கூடும். நீங்கள் நடக்கும்போது உங்களுடைய முதுகு நிமிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். தோள்கள் தளர்ந்து முன்னோக்கி நகர்வதற்கு ஏற்றவாறு நேராக பார்த்தபடி நடக்க வேண்டும்.
இதையும் படிங்க: வெறும் 30 நிமிட வாக்கிங்!! வெளிப்படையாக தெரியாத 6 நன்மைகள்!!
நீங்கள் ஓடும் போது கைகளை அசைக்காமல் உங்கள ஓட முடியாது அல்லவா? அதைப்போல நடை பயிற்சி செய்யும் போதும் நிச்சயமாக கைகளை முன்னும் பின்னும் நகர்த்த வேண்டும். உங்களுடைய முழு உடலும் இயக்கத்தில் இருக்க கைகளை அசைப்பது அவசியமாகிறது கைகள் அசையும் போது உங்களுடைய வயிற்று தசைகள் ஈடுபடுகின்றன இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.