Natural Relief from Constipation - How Curd and Jaggery Can Help : நம்முடைய வயிறு சுத்தமாக இருப்பது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. தொடர்ந்து உங்களுடைய வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் வயிற்றுக்குள்ளேயே இருந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். இது உண்மைதான். வயிற்றில் உள்ள கழிவுகள் சரிவர வெளியேறாவிட்டால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், பசியின்மை, அஜீரணம், முதுகு வலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
28
வயிற்றை சுத்தம் செய்ய எளிய வழி;
உங்களுடைய வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் இருப்பது உங்களுடைய ஆற்றலையும் பாதிக்கும். சுறுசுறுப்பாக இல்லாமல் மந்தமாக உணரச் செய்யும். இதனை எளிமையாக சரிசெய்ய வீட்டு வைத்தியம் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு வயிற்றில் இருக்கும் கழிவுகளை எளிதில் அகற்ற முடியும். இந்த பதிவில் வயிற்றை எளிதில் எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
38
தயிர், வெல்லம்:
- தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தக் கூடியது. இதை உண்பதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் பண்புகள் தயிரில் உள்ளது. இதனால் வயிறு எளிதில் சுத்தமாகும்.
- வெல்லம் வெறும் இனிப்பு அல்லது. அது இயற்கையாம நச்சு நீக்கி போல் செயல்படுகிறது. உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும், செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் உதவும்.
48
எவ்வாறு உண்ண வேண்டும்?
ஒரு கிண்ணம் தயிருக்கு ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வெல்லம் உடைத்து சேர்க்கலாம். இரண்டையும் நன்கு கலக்கிய பின்னர் வெறும் வயிற்றில் அல்லது உணவு சாப்பிட்ட பின்னர் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
தயிரும் வெல்லமும் சாப்பிட வேண்டும் என்றால் அதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும் காலை எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் இரவு சாப்பிட்ட பின்னர் உண்ணலாம் ஆனால் இரவு உணவை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம்.
- தயிரும், வெல்லமும் கலந்து உண்பதால் வெளியேற கடினமான மலமும் இலகுவாக்கப்படுகிறது. குடல் இயக்கமும் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. வெல்லத்தில் காணப்படும் என்சைம்கள், தயிரின் புரோபயாடிக்குகள் இணைந்து செரிமான அமைப்பை நன்கு செயல்பட வைக்கிறது.
- வெல்லம் உண்ணும்போது உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க உதவுகிறது. இதனால் வயிறு, கல்லீரல் ஆகியவை சுத்திகரிக்கப்படும். வெல்லம் நம் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும் உணவாகு. தயிர் இந்த கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
78
மலச்சிக்கல் நீங்க டிப்ஸ்!
- நீங்கள் வயிற்றை சுத்தப்படுத்த நினைத்தால் நிறைத தண்ணீர் குடிக்கவேண்டும். தினமும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிட வேண்டும்.
- நம்முடைய உடல் செயல்பாடு தான் செரிமான செயல்முறையை மேம்படுத்தும். அதனால் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்துங்கள்.
88
நச்சு நீக்கும் பழங்கள்!
பழங்கள், காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு நல்லது. குறிப்பாக எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய பழங்கள் நச்சு நீக்கியாக செயல்படும்.