உடற்பயிற்சியோட பலன்கள் தெரிய இவ்வளவு நாட்களாகுமா? பொறுமை முக்கியம்!!
புதியதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்களுக்கு அதனால் ஏற்படும் மாற்றங்களை காண எவ்வளவு நாட்கள் ஆகும் என இந்தப் பதிவில் காணலாம்.
புதியதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்களுக்கு அதனால் ஏற்படும் மாற்றங்களை காண எவ்வளவு நாட்கள் ஆகும் என இந்தப் பதிவில் காணலாம்.
How Long To See Results From Exercise : எந்த ஒரு புதிய உடற்பயிற்சியை தொடங்கினாலும் அதன் பலன்களை விரைவில் காண மக்கள் விரும்புவர். பலர் உடனடியாக உடற்பயிற்சியின் முடிவுகள் உடலில் வெளிப்படுவதை காண நினைப்பார்கள். ஆனால் சில கிராம் எடை குறைய கூட நீண்ட நாள்கள் ஆவது போல தோன்றலாம்.
உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும் உங்களுடைய சகோதரன் அல்லது மனைவிக்கு மாற்றங்கள் விரைவில் தெரிய தொடங்கினாலும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இதனால் சிலருக்கு விரக்தி மனநிலை ஏற்படலாம். இந்த பதிவில் புதிய உடற்பயிற்சியை தொடங்கும்போது எவ்வளவு நாட்களில் அதன் முடிவுகள் தெரியத் தொடங்கும் என காணலாம்.
புதிய உடற்பயிற்சியால் எவ்வளவு சீக்கிரம் மாற்றங்கள் தெரியும் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒருவர் செய்யும் உடற்பயிற்சி வகை, எவ்வளவு தொடர்ந்து அதை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் முடிவுகளும் மாறுபடும். குறிப்பாக இதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் குறைந்தது 2 முதல் 4 வாரங்கள் வரை தொடர்ச்சியாக பயிற்சிகளை செய்யும்போது மாற்றங்கள் தெரிய தொடங்கும். சிலருக்கு 6 முதல் 12 வாரங்களுக்கு பின் தான் மாற்றங்கள் கண்கூடாகத் தெரியும். இதற்கிடையே முயற்சியை கைவிடக் கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும்.
இதையும் படிங்க: தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா? கண்டிப்பா இந்த 5 உணவுகளை சாப்பிடனும்!
ஒருவரின் வயது, பாலினம், வளர்சிதை மாற்றம் போன்ற பல காரணிகள் உடற்பயிற்சியின் முடிவுகளை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு ஆண்களை விட வளர்சிதை மாற்றம் குறைவாக உள்ளது. அதனால் ஆண்களுக்கு ஒப்பீட்டளவில் சீக்கிரம் மாற்றங்கள் ஏற்படலாம். ஆண்களின் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் ஆற்றல் அளவானது பெண்களை விட அதிகம். ஆண்களின் உடலமைப்பு பெண்களை விட மாறுபட்டது. அவர்களுடைய தசை நிறை அதிகம். வலுவான தசைகளுக்கு அதிக கலோரிகள் தேவைப்படும்.
இதையும் படிங்க: உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!! ஒரு பலனும் இல்லாம போய்டும்
கஷ்டப்பட்டு செய்யும் உடற்பயிற்சியின் பலன்களை காண ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் ஆவது கொஞ்சம் சோர்வடைய செய்யும் விஷயமாக தெரியலாம். ஆனால் உடற்பயிற்சி செய்வதால் கண்ணுக்கு தெரியாத பல மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதனால் முயற்சியை கைவிடாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.