Standing While Eating : நின்றுகொண்டே சாப்பிடும் நபரா? இந்த பிரச்சனையும் கூடவே வரும்! ஜாக்கிரதை

Published : Oct 20, 2025, 11:48 AM IST

நின்று கொண்டே சாப்பிடுவதால் செரிமானம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
14
Standing and Eating Digestion

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் உட்கார்ந்து சாப்பிட நேரமில்லனு பலரும் கையில் வைத்து நின்றுகொண்டே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முதல்படி நாம் சாப்பிடும் உணவு தான். எனவே அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் தினமும் நின்று கொண்டே சாப்பிடுவது செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் நலமும் பாதிக்கப்படும். இந்த பதிவில் நின்றுகொண்டே சாப்பிடுவதால் செரிமானம் எவ்வாறு பாதிப்படையும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

24
நின்றுகொண்டே சாப்பிடுவதால் செரிமானம் எவ்வாறு பாதிப்படையும்?

- நீங்கள் நின்று கொண்டு சாப்பிடும் போது புவி ஈர்ப்பு விசை காரணமாக உங்களது கால்களில் இரத்தம் தேங்கி இருக்கும். இதனால் செரிமான மண்டலத்திற்கு பாயும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும். இதனால் உணவானது சரியாக உடையாமல் போகும். இதன் விளைவாக வாயு, வீக்கம், அஜீரணம் உண்டாகும்.

- அதுபோல நின்று கொண்டு சாப்பிடும் போது விரைவாக சாப்பிடுவோம். இதனால் அதிகப்படியான காற்றை விளங்கி விடுவோம். இதனால் வாயு தொல்லை, அசெளகரியம் மேலும் அதிகரிக்கும்.

- அதுமட்டுமின்றி உணவே சரியாக மென்று சாப்பிடாவிட்டால் வயிற்று பிடிப்பை ஏற்படுத்தும். மேலும் உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க உணவை மெதுவாகவும், நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

- நின்று கொண்டு சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் ஏற்படும். குறிப்பாக கார்போஹைட்ரேட் உணவுகள் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

34
நின்று கொண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் குறையுமா?

அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் நின்று கொண்டு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் நின்றபடி சாப்பிட்டால் வயிற்றில் அழுத்தம் குறைந்து அமில ரிஃப்ளக்ஸ் அபாயமும் குறைந்துவிடும். அதுபோல இந்த பிரச்சனை உள்ளவர்கள் இடது புறமாக சாய்ந்து தூங்கினால் அசாதாரணம் மேலும் குறையும் என்று சொல்லப்படுகிறது.

44
எப்படி சாப்பிடணும்?

உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவது குடலுக்கு உணவை நகர்த்துவதை எளிதாக்கும் மற்றும் மூச்சுத்திணறல் அபாயத்தை குறைக்கும். அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் உணவு மெதுவாகவும், நன்கு மென்றும் சாப்பிட்டால் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories