Immunity Boosting Foods : பலவீனமா இருக்கா? நோயெதிர்ப்பு சக்தியோட வலிமையாக இந்த உணவுகளைக் கண்டிப்பா சாப்பிடுங்க..

Published : Oct 16, 2025, 05:24 PM IST

இயற்கை முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Immunity Boosting Foods

நம் ஆரோக்கியத்துடன் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். ஏனெனில், இது தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த உடலின் வலிமையும் மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். இதற்கு உங்களது உணவில் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். அந்த வகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

27
சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. மேலும் இந்த பழங்கள் இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகின்றன. தொற்றுக்கள் மற்றும் எதிர்த்து போராடுவதற்கு இவை மிகவும் அவசியம். நீங்கள் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால் சிட்ரஸ் பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.

37
பெர்ரிகள் :

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை செல்கள் சேதமடைவதை தடுத்து, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் அவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

47
பூண்டு :

பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இதில் இருக்கும் அல்லிசின் என்று கலவையானது, வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உங்களது தினசரி உணவில் பூண்டு சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

57
பாதாம் :

பாதாமில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி2, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மற்றும் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இதற்கு தினமும் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதம் சாப்பிடுங்கள். இல்லையெனில் சிற்றுண்டியாக கூட சாப்பிடலாம்.

67
கீரைகள் :

கீரைகளில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே இருக்கும். நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. எனவே உங்களது தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

77
தயிர் :

தயிரில் புரோபயாடிக் நிறைந்துள்ளன. இது குடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பெரும் பகுதி எனது குடலில் தான் இருப்பதால் உங்களது உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories