
இன்றைய காலகட்டத்தில் உலகளவில் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது வந்துவிட்டால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகங்கள், கண்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் பாதிக்கப்படும். ஆனாலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருந்துகளுடன் சீரான உணவு, உடற்பயிற்சியுடன் சில இயற்கை பானங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரி இப்போது இந்த பதிவில் அந்த பானங்களை பற்றி பார்க்கலாம்.
சில ஆய்வுகள் படி கற்றாழை ஜூஸின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக கண்டறிந்தன. சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் சுரப்பை சீராக்க இது உதவுகிறது. இது தவிர உயரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் கற்றாழை ஜூஸ் உதவுகிறது. இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு புதிய கற்றாழையில் இருந்து 1-2 ஸ்பூன் ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறந்த பலன்களை பெறுவீர்கள்.
வெந்தய நீர் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 ஸ்பூன் வெந்தயத்தை கழுவி ஊறவைத்து பிறகு மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும், இன்சுலின் மேம்படும். குறிப்பாக சாப்பிட்ட பிறகு சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாகும் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவையும் பராமரிக்கும்.
பாகற்காய் ஜூஸ் கசப்பாக இருந்தாலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் பண்புகள் உறிஞ்சுவதை மேம்படுத்தும். இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவு பாற்காயை எடுத்து நன்கு கழுவி அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி 1 கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு அல்லது ஒரு சிட்டிகை உப்பு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா. இது உணவின் அதிகரிப்பது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த, இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த மற்றும் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. இலவங்கப்பட்டை டி தயாரிக்க ஒரு கிளாஸ் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதில் சின்ன இலவங்கப்பட்டை குச்சியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டவும். அவ்வளவுதான் லவங்கப்பட்டை டீ தயார். இந்த டீயை காலையில் அல்லது சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் செம்பருத்தி டீ உதவுவதாக ஆராய்ச்சியை கண்டறிந்துள்ளன. செம்பருத்தி பூவின் உலர்ந்த இதழிலிருந்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இந்த டீயில் இருக்கும் பண்புகள் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை கற்றுக் கொள் வைக்கவும் உதவுகிறது. செம்பருத்தி டீ தயாரிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 1-2 ஸ்பூன் உலர்ந்த செம்பருத்தி இதழ்களை சேர்த்த சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு அதை வடிகட்டி குடிக்கவும்.