Oral Health : வெறும் பல் தானேனு நினைக்காதீங்க! வாய் ஒழுங்கா இல்லன்னா குடல் முதல் இதயம் வரை பல பிரச்சனைகள்!!

Published : Jul 31, 2025, 09:10 AM IST

வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தாவிட்டால் அதனால் மோசமான ஆரோக்கிய பிரச்சனைகள் தலைதூக்கலாம்.

PREV
15

தினமும் பல் துலக்குவது சின்ன விஷயமாக இருந்தாலும், அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. நீங்கள் வாய்வழி சுகாதாரத்தை அலட்சியப்படுத்தினால் அது குடல் ஆரோக்கியம் தொடங்கி பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆய்வுகளில் வெளியான தகவல்களின்படி, மோசமான பல் பராமரிப்பு வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் பாதிக்கும்.

25

வாய், குடல் ஆரோக்கியத்தின் தொடர்பு

வாய்-குடல் அச்சு மூலம் இரண்டும் நெருக்கமாக இணைக்கப்பட்டவை. வாய் சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் வாயில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுடன் குடலுக்குச் செல்கின்றன. அங்கு சமநிலையை சிதைத்து செரிமானகோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறையல் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.

35

பல் துலக்காமல் இருப்பதும், இரவில் சாப்பிட்டு பற்களை சுத்தம் செய்யாமல் தூங்குவதும் மோசமான பழக்கங்களில் ஒன்றாகும். இதனால் வாயில் இருக்கும் போர்பிரோமோனாஸ் ஜிங்கிவாலிஸ், ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் ஆகியவை பெருகுகின்றன. இவை ஈறு நோய் ஏற்படுத்துபவை. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இவை வயிற்று அமிலத்தைத் வைத்து குடலுக்கு செல்லும் என சொல்கின்றன. இவை குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து நுண்ணுயிர் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

45

பாதிப்புகள்

பற்களை பராமரிக்காமல் விட்டால் நாளடைவில் செரிமானப் பாதையில் வீக்கம், குடல் புறணி பலவீனம், கசிவு குடல் நோய்க்குறியின் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதுமாதிரியான பல செரிமான மண்டல உறுப்புகளின் பிரச்சனை ஏற்படும். இது தவிர வாய்ப்புண்கள், ஈறுகள் வீக்கம் அடைதல், இரத்தப்போக்கு, பற்சிதைவு ஏற்படலாம். வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்காவிட்டால் இதயம், மூளை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்.

55

இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்க முறையாக பல் துலக்குங்கள். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்கலாம். இரவில் பல் துலக்கிவிட்டு தூங்க செல்லுங்கள். பற்களை பாதிக்கும் இனிப்பு உணவுகளை குறைத்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories