சுகர் நோயாளிகள் எவ்வளவு தூரம் நடக்கனும்? நம்ப முடியாத பலன்கள்!!
சுகர் நோயாளிகள் ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சுகர் நோயாளிகள் ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
How Walking Reduces Sugar Levels : சர்க்கரை நோய் மாத்திரைக்கு கட்டுப்பட்டாலும், உணவு, உடற்செயல்பாடு போன்றவை அதற்கு மற்றுமொரு தேவையாக இருக்கிறது. அதிலும் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்துவது தினமும் நடைபயிற்சி செய்வதை தான். ஏனென்றால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர நடைபயிற்சி பெரிதும் உதவுவதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்களும் உள்ளன. இந்த பதிவில் ஒரு நாளுக்கு சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
நடைபயிற்சி செல்லும் சில சில நாட்களிலேயே மூட்டு வலி காரணமாக நடைபயிற்சி செல்வதை சிலர் நிறுத்தி விடுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. சுகர் நோயாளிகள் நடைபயிற்சி செல்லும் போது புதிதாக செல்பவராக இருந்தால் மூட்டு வலி, உடல் வலி ஏற்படுவது இயல்புதான். இந்த நேரங்களில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து கால்களை சற்று ஓய்வுக்கு உட்படுத்த வேண்டும். பின்னர் வழக்கம் போல நடைபயிற்சி செல்ல வேண்டும். மூட்டு வலிக்கிறது என்பதற்காக நடைபயிற்சியை ஒட்டுமொத்தமாக நிறுத்துவது என்பது தவறான செயலாகும். ஐஸ் கட்டி ஒத்தடம், ஓய்வு இரண்டும் கொடுத்து நலமான பின் நடக்க வேண்டும்.
நடைபயிற்சி செல்வதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைகிறது. தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் 100-150 மி.கி சர்க்கரை அளவு குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாத்திரைகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது போலவே 1 மணி நேரம் நடப்பதும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். நாள்தோறும் நடப்பது சர்க்கரை நோயை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க: வாக்கிங் போனாலே ரொம்ப மூச்சு வாங்குதா? அப்ப இதை உடனே கவனிங்க!!
இப்போதுதான் நடக்க தொடங்குபவராக இருந்தால் ஆரம்ப காலகட்டத்தில் 20 நிமிடங்கள் நடப்பதை பழக்கப்படுத்தலாம். பின்னர் படிப்படியாக ஐந்து நிமிடங்கள் அதிகப்படுத்தி ஒரு மணி நேரம் வரை நடக்கலாம். உங்களால் தொடர்ச்சியாக நடக்க முடியவில்லை என்றால் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் தொடர்ந்து நடப்பதை வழக்கப்படுத்துங்கள். நாளடைவில் உங்களால் ஓய்வெடுக்காமல் நடக்க முடியும். மெதுவான நடைபயிற்சி, வேகமான நடைபயிற்சி இரண்டிலுமே நன்மைகள் இருந்தாலும் நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் வேகமாக நடப்பது சிறந்த தீர்வாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளை பொருத்தவரை ஒரு மணி நேரம் நடப்பது அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
இதையும் படிங்க: வாக்கிங் சென்றே சுலபமா எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!!
உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் விருப்பமிருந்தால் நடைபயிற்சியுடன் நிறுத்திக் கொள்ளாமல், தசைகளை கூட்டும் பயிற்சிகளையும் செய்வது நல்லது. இவ்வாறு செய்வதால் உங்களுடைய சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் தசை கூட்டும் பயிற்சிகளை செய்யலாம்.