ஆளி விதைகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. இந்த கலவை உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் நேர்மறை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆளி விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, லிக்னான்கள், புரதம் ஆகியவற்றை கொண்டுள்ளன. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான இயக்கம் மற்றும் குடல் இயக்கம் மேம்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது. இதில் உள்ள லிக்னான்கள் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டுள்ளன. இதில் இருக்கும் புரதம் தாவர அடிப்படையிலான புரதத்திற்கான நல்ல ஆதாரமாகும்.
25
ஆளி விதைகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவதால் நன்மைகள்
அதேபோல் தயிரில் இருக்கும் நல்ல புரதங்கள் தசை வளர்ச்சிக்கும் செல்களின் பழுது பார்ப்பிருக்கும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தயிரியில் இருக்கும் ப்ரோ பயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. தயிருடன் ஆளி விதைகளை கலந்து சாப்பிடும் பொழுது பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, இதய நோய் அபாயமும் குறைகிறது. ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்ய உதவுகிறது.
35
நீரிழிவு நோயாளிகளிக்கு ஏற்ற சாலட்
ஆளி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து உணவில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை சீராக்க வைத்திருக்க உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் இருக்கும் புரதம் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் அதிகப்படியான உணவு உட்கொளலை குறைத்து, எடை இழப்பு மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தயிரில் இருக்கும் புரதமும் பசியை கட்டுப்படுத்த உதவும். ஆளி விதைகளில் இருக்கும் மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் தயிரில் உள்ள கால்சியமும் இணைந்து எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. ஆளி விதை மற்றும் தயிர் இரண்டும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன.
ஆளி விதைகளில் காணப்படும் லிக்னான்கள் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ் என்பதால் அவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாட்டை மிதமாக மாற்றி அமைக்கும். இதன் காரணமாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைப்பதிலும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதில் உதவக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் உள்ள பிற சேர்மங்கள் ஃப்ரீ ரேடிகல்சால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கின்றன. முழு ஆளி விதைகளை விட பொடித்த ஆளி விதைகளை பயன்படுத்துவது நல்லது. முழு ஆளி விதைகள் செரிமானம் ஆகாமல் வெளியேற வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி பொடித்த ஆளி விதைகளை தயிருடன் கலந்து காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டி ஆகவோ எடுத்துக் கொள்ளலாம்.
55
மருத்துவ ஆலோசனை தேவை
ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை உட்கொள்ளும் பொழுது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஆளி விதைகளை உட்கொள்ளும் பொழுது சிலருக்கு வாயு அல்லது வீக்கம் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஏற்கனவே மருத்துவ நிலை உள்ளவர்கள் ஆளி விதைகளை தங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்னர் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது.