வெறும் வயிற்றில் பழைய சோறு, நீச்ச தண்ணீர் குடிங்க? அன்லிமிடெட் நன்மைகள்!!

Published : Mar 08, 2025, 09:24 AM IST

காலையில் வெறும் வயிற்றில் பழைய சோறு, நீச்ச தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

PREV
15
வெறும் வயிற்றில் பழைய சோறு, நீச்ச தண்ணீர் குடிங்க? அன்லிமிடெட் நன்மைகள்!!

Pazhaya Soru Health Benefits : அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்களின் காலை உணவாக பழைய சோறும, நீச்ச தண்ணீரும் தான். அதனால் தான் என்னவோ அவர்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிந்தது. ஆனால் தற்போது இட்லி, தோசை வந்து விட்டதால் பழைய சோறு, நீச்ச தண்ணீர் ஏழைகளின் உணவாகிவிட்டது. அமெரிக்கா ஆய்வு ஒன்றில் பழைய சோறு தான் உலகிலேயே மிக ஆரோக்கியமான காலை உணவு என்று தெரிவித்துள்ளது. அதுபோல 5 ஸ்டார் ஹோட்டல்களில் கூட மண் பாத்திரங்களில் பழைய சோறு பரிமாறப்படுகிறது. அப்படி என்னதான் இந்த பழைய சோறு மற்றும் நீச்ச தண்ணீரில் இருக்கிறது என்று இங்கு அறிந்து கொள்ளலாம்.

25
ஊட்டச்சத்துக்கள்

பழைய சோறு மற்றும் நீச்ச தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக அதில் இருக்கும் இரும்புச்சத்து வழக்கமான சாதத்தை விட 21 மடங்கு இருப்பதாக ஆய்வு சொல்லுகின்றன. 

இதையும் படிங்க: கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

35
உடலை குளிர்ச்சியாக வைக்கும்

பழைய சாதத்தில் வைட்டமின் டி அதிகமாக உருவாகும். அது உடல் சோர்வை நீக்கும், வயிற்றில் அமிலத்தன்மை வாயு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

பழைய சாதத்தில் இருக்கும் வைட்டமின் பி வயிற்றில் இருக்கும் புண்கள் அதாவது அல்சரை குணப்படுத்தும். மேலும் பழைய சாதத்தில் ஏராளமான நுண்ணுயிர்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உற்பத்தியாவதால் அது நம் உடலின் பிஹெச் அளவை மேம்படுத்தி குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும்.

இதையும் படிங்க:  உடல் எடையை குறைக்க எந்த அரிசி பெஸ்ட்? 5 வகையான அரிசி லிஸ்ட் இதோ!

45
மலச்சிக்கலை போக்கும்

பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் உடலில் ஜீரண சக்தி மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. அதாவது குடல் இயக்கங்களை சீராக்கி மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

சரும மற்றும் தலைமுடி

பழைய சோறு மற்றும் அதன் நீச்ச தண்ணீர் சருமத்தில் வயதான தோற்றம் உருவாவதை தடுக்க உதவுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சருமத்தின் நிகழ்வு தன்மையை ஏற்படுத்தும். அது போல பழைய சாதத்தில் இருக்கும் நீச்ச தண்ணீரை தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பிறகு இந்த தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசினால் போதும். தலைமுடி உறுதியாகவும், பளபளப்பாகவும் மாறத் தொடங்கும். முக்கியமாக இந்த நீரில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும்.

55
பிற நன்மைகள்:

- பழைய சாதம் மற்றும் அதன் நீச்ச தண்ணீரில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.

- மேலும் இவற்றில் மக்னீசியம் மற்றும் செலீனியம் அதிகமாக பெற முடியும். இவை நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்க உதவும்.

- இந்த பழைய சோறு மற்றும் புளிச்ச தண்ணீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.

Read more Photos on
click me!

Recommended Stories