முட்டையில் புரதம் மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது உங்களுக்கு தெரியும். இதனை சாப்பிட்டு வந்தால் தசைகள், எலும்புகளுக்கு பலம் கிடைக்கும். ஆனால் முட்டை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் இதை உட்கொள்வதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
முட்டையில் சத்துக்கள்..
முட்டை சுவையாகவும், எளிதாகவும் சமைக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை எளிதில் சாப்பிடலாம். இதில், 6.3 கிராம் புரதம், 69 மில்லிகிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ - 5.4%, கால்சியம் - 2.2% , இரும்புச்சத்து - 4.9% உள்ளது. இருப்பினும் முட்டை சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதை யார் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.